முழுக்க முழுக்க ஐபோனில் தயாரிக்கப்பட்ட மலையாள சினிமா ஓடிடியில் ரிலீஸ்

Fahad fazil movie c u soon to be released on amazon prime

கொரோனா ஊரடங்கு சட்டத்தைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியா முழுவதும் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த மாதம் முதல் கொரோனா நிபந்தனைகளுடன் சில சினிமாக்களின் படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளன. கேரளாவிலும் ஒரு சில படங்களின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பிரபல நடிகர் பகத் பாசில் நாயகனாக நடிக்கும் 'சீ யு சூன்' என்ற படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி விட்டது. இந்த படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் முழுக்க முழுக்க ஐ போனை வைத்துத் தான் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. 'டேக் ஆஃப்', 'மாலிக்' ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய மகேஷ் நாராயணன் தான் இந்த படத்தை டைரக்ட் செய்துள்ளார். இதில் பகத் பாசில் தவிர ரோஷன் மேத்யூ, தர்சனா ராஜேந்திரன் உள்படப் பலர் நடித்துள்ளனர். இந்த படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. ஆனால் தியேட்டர்கள் திறக்கப்படாததால் ஓ டி டி தளத்தில் ரிலீஸ் செய்ய தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1ஆம் தேதி அமேசான் பிரைமில் இந்த படம் வெளியாகிறது.

You'r reading முழுக்க முழுக்க ஐபோனில் தயாரிக்கப்பட்ட மலையாள சினிமா ஓடிடியில் ரிலீஸ் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - திருமண பரிசால் ரோட்டை அடைத்த போலீஸ்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்