பிளாக் பேந்தர் போஸ்மேன் திடீர் மரணம்

Chadwick boseman star of black panther and avengers dies

உலகம் முழுவதும் பரபரப்பாக ஓடிய ஹாலிவுட் படமான 'பிளாக் பாந்தரி' ல் நாயகனாக நடித்தவர் சாட்விக் போஸ்மேன் (43). 'கெட் ஆன் அப்', '42' 'கேப்டன் அமெரிக்கா' உள்பட பல ஹாலிவுட் படங்களில் இவர் நடித்துள்ளார். 2016ல் வெளியான 'பிளாக் பாந்தர்' என்ற சினிமா தான் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. இதன் பின்னர் 'அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்', 'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' ஆகிய சூப்பர் ஹிட் படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த சில வருடங்களாக குடல் புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். லாஸ் ஏஞ்சல்சில் உள்ள தனது வீட்டில் ஓய்வு எடுத்து வந்த நிலையில் திடீரென இவர் மரணமடைந்தார்.

You'r reading பிளாக் பேந்தர் போஸ்மேன் திடீர் மரணம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வரும் ஐபிஎல் 2020 இல் இனி இவர் இல்லை ..!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்