பிரபல நடிகை மைனா நந்தினிக்கு குவா குவா..

பிரபல நடிகை மைனா நந்தினிக்கு குவா குவா..

பல்வேறு திரைப்படங்களில் நடித்திருப்பவர் நடிகை மைனா
நந்தினி. இவர் சிவகார்த்திகேயனின் 'நம்ம வீட்டுப் பிள்ளை' படத்திலும் நடித்திருந்தார். அதில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சரவணன் மீனாட்சி' தொடரில் நடிக்கிறார்.


மைனா நந்தினி கர்ப்பமாக இருந்தார். சமீபத்தில் அவருக்கு வளைகாப்பு நடந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது கணவர் யோகேஷ்வரன் baby Coming Soon என சமூக வளைதளத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மைனா நந்தினிக்கு பிரசவ வலி ஏற்பட அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மைனா நந்தினியின் கணவர் யோகேஷ்வரன், தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாகவும் கூறி உள்ளார்.

You'r reading பிரபல நடிகை மைனா நந்தினிக்கு குவா குவா.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சிங்கம் 2 பட பாணியில் போதை மருந்து கடத்தல்: ஆப்பிரிக்கா லோயம் பெப்பர் சம்பா கைது..கைதான ராகினி திவேதி வெளியிடும் திடுக்கிடும் தகவல்களால் பரபரப்பு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்