சல்மானா...? பாபியா...? கன்பீஸ் ஆன ஹாலிவுட் நடிகர்

பிரபல ஹாலிவுட் நடிகர் சில்வர்ஸ்டர் ஸ்டலோன், சல்மான் கானுக்கு வாழ்த்து கூற வேறொரு நடிகர் படத்தைப் பயன்படுத்தியுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.

ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சில்வர்ஸ்டர் ஸ்டலோன், சல்மான் கான் நடிக்கும் அடுத்தப் திரைப்படமான `ரேஸ்-3’-க்கு தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் இருந்து வாழ்த்துகள் தெரிவித்திருந்தார். சிக்கல் என்னவென்றால், அவர் வாழ்த்துத் தெரிவிக்க பயன்படுத்திய புகைப்படத்தில் சல்மான் கான் இல்லை.

பாலிவுட் நடிகரான பாபி டியோல் தோன்றும் ரேஸ்-3 திரைப்பட போஸ்டரை ஷேர் செய்துள்ளார் ஸ்டலோன். இதற்கு அவர் இணையத்தில் செம கலாய் வாங்கிக் கொண்டிருக்கிறார். பொங்கல் என்றாலே பட்டாசு வெடிக்கும் நெட்டிசன்களுக்கு தீபாவளி கிடைத்தால் விடவாப் போகிறார்கள்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading சல்மானா...? பாபியா...? கன்பீஸ் ஆன ஹாலிவுட் நடிகர் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மாலத்தீவுகளில் குழப்பம் தணிந்தது… அவசரநிலை தளர்த்தப்பட்டது!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்