பள்ளி பருவத்தின் ஞாபகம்..HAIR CUT குறும்படத்தின் விமர்சனம்..மிஸ் பண்ணாம பாருங்க

Haircut shortfilm review produced by Dumangoli productions

ஆண்களுக்கு தலையில் முடி வளர்ப்பது என்றால் மிகவும் இஷ்டம் ஆனால் சுற்றி இருப்பவர்கள் ஆம்பள பிள்ளைக்கு எதுக்கு இவ்வளவு முடி? என்று கேட்பார்கள்.

அதுவும் விஜய்,அஜித் போல முடி வளர்க்க வேண்டும் என்பது பலரின் கனவுகள்.. இந்த 'HAIR CUT' குறும்படத்தில் ஆண்கள் எவ்வாறு முடி வளர்க்க ஆசைப் படுகிறார்கள் என்பதையும் ஆனால் கடைசில் அது எவ்வாறு சொதப்புகிறது என்பதையும் நடிகை செல்வா தனது முகப் பாவனைகளால் சிறப்பாக எடுத்து கூறியுள்ளார். 'HAIR CUT' என்ற சிறிய குறும்படம் டூமாங்கோலியின் தயாரிப்பில் எடுக்கப்பட்டவையாகும்.இப்பொழுது இருக்கும் நவீன வசதிகள் எல்லாம் அப்பொழுது கிடையாது. நாம் சொல்லும் வடிவில் முடியை வெட்டுவது என்பது சற்று கடினமாக தான் இருந்தது.

குசேலன் திரைப்படத்தில் வருகின்ற சலூன் கடை போல தான் அக்காலத்தில் இருக்கும். இந்த படம் பார்க்கும் பொழுது 90's இல் பிறந்தவர்களுக்கு தங்களின் பள்ளி பருவ நாட்களின் ஞாபகத்தை தூண்டும். நிறைய ஆண்கள் தனது பள்ளி பருவத்தில் மூடி வெட்டாமல் வகுப்பு அறைக்கு வெளியே நின்று இருப்பார்கள். அப்படி நின்றவர்கள் யாரவது இருந்தால் மறக்காமல் உங்களது அனுபவத்தை கமெண்ட் செக்சனில் பகிருங்கள்...

You'r reading பள்ளி பருவத்தின் ஞாபகம்..HAIR CUT குறும்படத்தின் விமர்சனம்..மிஸ் பண்ணாம பாருங்க Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மக்களுக்கு மணல் கிடைக்காத நிலையில் குவாரிகள் எதற்கு? உயர்நீதிமன்றம் சாடல்.

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்