ஸ்ரீதேவிnbspமகள் கதாநாயகியாக அறிமுகம்

ஜான்வி கபூர் ஜோடியாக இஷான் ஹட்டர்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ஸ்ரீதேவி, பாலிவுட் நடிகர், தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டு மும்பையிலேயே செட்டிலானார். இதையடுத்து தற்போது மீண்டும் நடிப்புக்கு திரும்பி அவ்வப்போது சில படங்களில் தோன்றி வருகிறார் நடிகை ஸ்ரீதேவி.

ஸ்ரீதேவி தனது மூத்த மகள் ஜான்வி கபூரை ஹீரோயினாக்க திட்டமிட்டர்
மராத்தி மொழியில் வெளியான 'சாய்ரத்' படத்தின் ரீமேக் மூலம் பாலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகப்படுத்த முடிவு செய்தார். அதன் படி 'சாய்ரத்' ஹிந்தி ரீமேக் 'தடக்' என்ற பெயரில் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அத்துடன் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. இப் படத்தில் ஜான்வி கபூர் ஜோடியாக இஷான் ஹட்டர் என்பவர் நடிக்கிறார். இவர் பாலிவுட் ஹீரோ ஷாகித் கபூரின் சகோதரர் ஆவார்.

You'r reading ஸ்ரீதேவிnbspமகள் கதாநாயகியாக அறிமுகம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இயக்குநர் பாண்டிராஜ் படத்தில் பிரேமம் அனுபமா

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்