மண்டேலா படம் கொடுத்த ரசிகர்... ஐபிஎல் வீரர் உடன் நட்பான யோகி பாபு!

இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் யோகிபாபு நடிப்பில் வெளியான படம் மண்டேலா. இந்த படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. படம் வெளியான சில நாட்களிலேயே பெரும் வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாக பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. படத்தில் ஷீலா ராஜ்குமார், சங்கிலி மருகன், ஜி.எம்.சுந்தர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் பல்வேறு தரப்பினரிடம் பாராட்டுகளை பெற்று வரும் நிலையில் மண்டேலா படத்தை பார்த்து, ஐபிஎல் வீரர் ஒருவர் யோகி பாபுக்கு ரசிகராக மாறியிருப்பதாக கூறியிருக்கிறார்.

அவர் வேறு யாருமல்ல, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் ஸ்ரீவட்ஸ் கோஸ்வாமி தான். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடும் ஸ்ரீவட்ஸ் கோஸ்வாமி இதுவரை 31 ஐபிஎல் மேட்ச்களில் விளையாடியுள்ளார். மேலும், 19 வயத்துக்குட்பட்டோர் அணியில் இடம்பெற்று கோலி தலைமையில் கோப்பை கைப்பற்றியபோது கோஸ்வாமி இந்திய அணியில் முக்கியமான வீரராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இவர் சமீபத்தில் மண்டேலா படம் பார்த்து விட்டு ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், ``இரண்டு நாட்களுக்கு முன்பு நெட்ஃபிக்ஸ் இல் மண்டேலா படம் பார்த்தேன். அதில் யோகி பாபுவின் நடிப்பைக் கண்டு வியந்தேன். அவர் என்ன ஒரு நடிகர். என்ன ஒரு கதை. யோகி பாபு நட்டுவின் நண்பர் என்பதை அறிந்தேன். நட்டு என்னை யோகி பாபுவுடன் வீடியோ காலில் பேச வைத்தார். நிச்சயம் எனக்கு ஃபேன் பாய் மொமெண்ட் அது" என உற்சாகமாக பதிவிட்டுள்ளார். கோஸ்வாமியின் இந்தப் பதிவு ரசிகர்களை தற்போது கவர்ந்து வருகிறது.

உழைப்புக்கேற்ற ஊதியம் மக்கா!

You'r reading மண்டேலா படம் கொடுத்த ரசிகர்... ஐபிஎல் வீரர் உடன் நட்பான யோகி பாபு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அவர் க்ளீன்போல்டு ஆகிவிட்டார் – மம்தாவை சீண்டும் மோடி!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்