வலிமை திரைப்படத்தில் நடிகர் அஜித் புதுவித முயற்சி

வலிமை திரைப்படத்தில் நடிகர் அஜித் புதுவிதமான முயற்சியை எடுத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

நேர் கொண்ட பார்வை திரைப் படத்திற்கு பிறகு இயக்குநர் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் உடன் இரண்டாவது முறையாக அஜித் இணைந்துள்ள படம் வலிமை. இந்த படத்தில் அஜித், போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். போதை பொருள் கடத்தல்காரர்களை எதிர்க்கும் போலீசாக அவர் நடித்துள்ளார். வில்லனாக கார்த்திகேயாவும், ஹீரோயினாக ஹூமா குரேஷியும் நடித்துள்ளனர். இவர்களுடன் ராஜ் ஐயப்பா, சுமித்ரா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

பிரதமர் முதல் முதலமைச்சர் வரையும், டிவி நிகழ்ச்சிகள் நேரலையில் என அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டது இந்த படத்திற்கு கூடுதல் பப்ளிசிட்டி ஆகி உள்ளது. அஜித் கோரிக்கை வைத்த பிறகும் வலிமை அப்டேட் கேட்பதை ரசிகர்கள் நிறுத்தியதாக தெரியவில்லை.

வலிமை திரைப்படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டரை அஜித்தின் 50 வது பிறந்த நாளான மே 1 ஆம் தேதியன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. பாலிவுட்டின் புகழ்பெற்ற போஸ்டர் டிசைனரான ராகுல் நந்தா தான், வலிமை படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டரை வடிவமைத்துள்ளார். இந்த போஸ்டர் அஜித் ரசிகர்களுக்கு நிச்சயமாக ஒரு விருந்தாக அமையும் என கூறப்படுகிறது.

வலிமை படத்தில் முதன்முறையாக அஜித் பேருந்து ஒன்றை ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. வலிமை படத்தில் இடம்பெறும் ஒரு சேஸிங் காட்சியில் அஜித் பேருந்து ஓட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. இது வலிமை படத்தின் மாஸ் காட்சிகளில் ஒன்றாக இருக்கும் எனவும், இந்தக் காட்சியை பார்க்கும் ரசிகர்கள் கைத்ட்டி, விசில் அடித்து ஆரவாரம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

You'r reading வலிமை திரைப்படத்தில் நடிகர் அஜித் புதுவித முயற்சி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அமெரிக்காவில் மேலும் ஒரு கருப்பின இளைஞர் கொலை - வெடித்தது போராட்டம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்