வலிமை நாயகியின் அடுத்த பட அப்டேட்

நேர் கொண்ட பார்வை திரைப் படத்திற்கு பிறகு இயக்குநர் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் உடன் இரண்டாவது முறையாக அஜித் இணைந்துள்ள படம் வலிமை. இந்த படத்தில் அஜித், போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். போதை பொருள் கடத்தல்காரர்களை எதிர்க்கும் போலீசாக அவர் நடித்துள்ளார். வில்லனாக கார்த்திகேயாவும், ஹீரோயினாக ஹூமா குரேஷியும் நடித்துள்ளனர். இவர்களுடன் ராஜ் ஐயப்பா, சுமித்ரா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

பிரதமர் முதல் முதலமைச்சர் வரையும், டிவி நிகழ்ச்சிகள் நேரலையில் என அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டது இந்த படத்திற்கு கூடுதல் பப்ளிசிட்டி ஆகி உள்ளது. அஜித் கோரிக்கை வைத்த பிறகும் வலிமை அப்டேட் கேட்பதை ரசிகர்கள் நிறுத்தியதாக தெரியவில்லை.

வலிமை திரைப்படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டரை அஜித்தின் 50 வது பிறந்த நாளான மே 1 ஆம் தேதியன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த அப்டேட் வரும் முன் வலிமை நாயகி ஹூமா குரேஷி அவரின் அடுத்த படத்தின் அப்டேட்டை கொடுத்துவிட்டார். பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஸாக் ஸ்னைடர் இயக்கி இருக்கும் ஆர்மி அஃப் தி டெட் எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் தான் முக்கியமான ரோலில் ஹூமா குரேஷி நடித்து இருக்கிறார். ஹீரோவாக மல்யுத்த வீர்ர் பெர்டிடிஸ்டா நடித்துள்ளார். இந்தப் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி உள்ளது. இதற்கிடையே, வலிமை படத்தின் அப்டேட மே 1ம் தேதி வெளியாக இருக்கின்ற நிலையில் இந்தப் படம் மே 21 ம் தேதி வெளியாகிறது.

You'r reading வலிமை நாயகியின் அடுத்த பட அப்டேட் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஷங்கர் - ஜீனியஸ், விக்ரம் - திறைமையாளர்... ரன்வீர் சிங் ஓபன் டாக்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்