ஜார்ஜியா ஓவர்.. அடுத்து சென்னை, மும்பை தான்.. விஜய் 65 அப்டேட்!

நடிகர் விஜய் தற்போது நெல்சன் குமார் இயக்கத்தில், விஜய் 65 படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்க, தமிழில் அறிமுகமாகி அக்கட தேசமான தெலுங்கு திரையுலகத்தை தற்போது ஆண்டு வரும் பூஜா ஹெக்டே இதில் விஜய்க்கு ஜோடி சேர்ந்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ஜார்ஜியாவில் பெய்து வரும் கடும் மழையால், படப்பிடிப்பு தடைபடுகிறது எனக் கூறப்பட்டது. தற்போது அனைத்தும் பிரச்சனைகளும் தீர்ந்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதனால் வரும் 26ம்தேதியுடன் ஜார்ஜியாவில் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்றும், இரண்டாம் கட்ட படபிடிப்பு சென்னை, மும்பை, ஹைதராபாத் என இந்தியாவின் பல்வேறு இடங்களில் கூறப்பட்டுள்ளது. 28ம் தேதி நாடு திரும்பும் விஜய் 65படக்குழுவினர், அதன்பிறகு மே முதல் வாரத்தில் சென்னையில் தொடங்கும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் இணைவார்கள் என்றும், சென்னையில் ஒரு பாடல் படப்பிடிப்புடன் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது என கூறப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் கொரோனா காரணமாக இங்கு அனுமதி கிடைக்காவிட்டால், படப்பிடிப்பு தளங்கள் மாறுபடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

You'r reading ஜார்ஜியா ஓவர்.. அடுத்து சென்னை, மும்பை தான்.. விஜய் 65 அப்டேட்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - `Political Activist என்று எழுதுங்கள்... திருமாவளவன் சொன்ன ருசிகரம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்