முதன்முறையாக ரஜினி படத்தில் விஜய் சேதுபதி..!

ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்தப் படத்தில் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் `மெர்க்குரி’ திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து அடுத்த ஒருப் படத்தை இயக்கப் போகிறார். அந்தப் படத்தை `சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இந்தத் திரைப்படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளார். முதன்முறையாக கார்த்திக் சுப்பராஜ்- ரஜினி ஆகியோர் கூட்டணி சேர்வதால், படத்துக்கான எதிர்பார்ப்பு எக்கசக்கமாக எகிறியுள்ளது.

இந்நிலையில், `மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும் இந்தப் படத்தில் நடிக்க உள்ளார் என்ற அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தியை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

You'r reading முதன்முறையாக ரஜினி படத்தில் விஜய் சேதுபதி..! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - `என் வயசு 25-தான்!’- சச்சின் கொடுத்த பன்ச்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்