புதிய வரவாக ஐஸ்வர்ய ராய்! ஒரே நாளில் லட்சம் பேர் வரவேற்பு!

’என்றும் உலக அழகி’ பட்டத்தைக் கொண்டுள்ள நடிகை ஐஸ்வர்யா ராய் கொடுத்த அதிரடி அறிமுகத்தை அவரது கணவர் அபிஷேக் பச்சன் வரவேற்றுள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா ராய் முதன்முதலாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனி கணக்குத் தொடங்கியுள்ளார். இன்ஸ்டாகிராம் என்னும் சமூக வலைதளம் உருவாகி, பிரபலமாகி வெகு காலம் ஆனபோதும் இப்போதுதான் என்ட்ரியே கொடுத்துள்ளார் ஐஸ்வர்யா.

இன்ஸ்டாகிராம் கணக்கு ஐஸ்வர்யா ராயின் அதிகாரப்பூர்வமான பக்கம்தான் என்பதை அவரது கணவரும் பாலிவுட் நடிகருமான அபிஷேக் பச்சன் உறுதிபடுத்தியுள்ளார். மேலும் நேற்று ஐஸ் அறிமுகமான ஒரே நாளில் ஒரு லட்சம் ஃபாலோயர்கள் அவரைப் பின்தொடரத் தொடங்கியுள்ளனர்.

தனது முதல் இன்ஸ்டா புகைப்படமாக தனது மகள் ஆரத்யா பிறந்தபோது எடுத்தப் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதற்கு அவரது கணவர் அபிஷேக் பச்சன், “போட்டோவுக்கு கிரெடிட் தர மாட்டீர்களா திருமதி.பி’ என வேடிக்கையாகக் கமென்ட் செய்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading புதிய வரவாக ஐஸ்வர்ய ராய்! ஒரே நாளில் லட்சம் பேர் வரவேற்பு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஐபிஎல் ஊழலை வெளிப்படுத்திய போலீஸ் அதிகாரி- நடுநிசியில் தற்கொலை!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்