கோச்சடையானுக்கு வாங்கிய கடனை அடைக்கவும்- லதா ரஜினிகாந்துக்கு ஆணை

ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படத்துக்காக வாங்கிய கடனை விரைவில் திரும்ப செலுத்துமாறு லதா ரஜினிகாந்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, ‘ஆட் பீரோ விளம்பர நிறுவனத்திடமிருந்து ‘கோச்சடையான்’ படப்படிப்பின் போது பெற்ற கடனான 6.2 கோடி ரூபாயை திரும்ப கொடுக்கச் சொன்ன பிறகும் ஏன் இன்னும் லதா ரஜினிகாந்த் பணத்தைக் கொடுக்கவில்லை’ என்று கேள்வி எழுப்பியுள்ளது.

கோச்சடையான் படப்பிடிப்பின் போதே ஆட் பீரோ நிறுவனம், மீடியோ ஒன் நிறுவனம் ஆகியவற்றுடன் லதா ரஜினிகாந்துக்கு பண விவகாரம் தொடர்பாக பிரச்னை வந்துள்ளது. இதையடுத்து, ஆட் பீரோ நீதிமன்றத்துக்குச் சென்றது. நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பளித்தது. அப்போது, ‘கடனை இன்னும் 12 வாரங்களில் கொடுக்க வேண்டும்’ என்று கூறியது.

ஆனால், பணம் இன்னும் கொடுக்கப்படவில்லை. இது ஒரு புறமிருக்க, கோச்சடையான் படப்பிடிப்பின் போது ஆட் பீரோ, லதா ரஜினிகாந்துக்கு 10 கோடி ரூபாய் கடன் கொடுத்ததாக குற்றம் சாட்டியது. இது தொடர்பாகவும் ஒரு வழக்கை நீதிமன்றத்தில் தொடுத்தது ஆட் பீரோ.

ஆனால், ஆட் பீரோவுடன் எந்த வித தகவலும் சொல்லப்படாமல் மீடியா ஒன், கோச்சடையான் உரிமங்களை எரோஸ் நிறுவனத்துக்கு விற்றது. இப்படிப்பட்ட சூழலில்தான் உச்ச நீதிமன்றம், ஜூலை 8, 2016 ஆம் ஆண்டு, ஆட் பீரோ வழக்கு குறித்து லதா ரஜினிகாந்துக்கு கேள்வி எழுப்பியது.

You'r reading கோச்சடையானுக்கு வாங்கிய கடனை அடைக்கவும்- லதா ரஜினிகாந்துக்கு ஆணை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சென்னையில் பயங்கரம்:போலீஸ் ராஜவேலுவை வெட்டிய ரவுடி சுட்டுக்கொலை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்