சர்கார் போஸ்டருக்கு நடிகை கௌதமி எதிர்ப்பு

புகை பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை ஒரு போதும் ஏற்றுகொள்ள முடியாது

தமிழ் சினிமாவில் புகழின் உச்சியை தொட்ட நடிகராக இருந்தாலும் கூட, புகைபிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை ஏற்க முடியாது என நடிகை கௌதமி கருத்து தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘சர்கார்’. இந்தபடத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ஜூன் 21 ஆம் தேதி வெளியானது. போஸ்டரில் விஜய் புகைப்பிடிப்பது போல் இருந்ததால் அதுகுறித்து விமர்சனங்கள் எழுந்தன. சில அரசியல் கட்சிகளும் அந்தக் காட்சியை நீக்க வேண்டும் என வலியுறுத்தின.

இந்நிலையில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் புற்றுநோயில் இருந்து மீண்டவர்களை கௌரவிக்கும் வகையில் நடந்த நிகழ்ச்சியில் நடிகை கௌதமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார். சமூக வலைதளங்கள் மூலம் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு தகவல்கள் அதிகம் பரப்பப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கௌதமி, "திரைப்படங்களில் நடிக்கும் எந்த நடிகராக இருந்தாலும், புகழின் உச்சிக்கே சென்றிருந்தாலும், புகை பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை ஒரு போதும் ஏற்றுகொள்ள முடியாது."

"நான் அரசியலுக்கு வந்தால் யாருக்கு ஆதராவக தேர்தல் களத்தில் நிற்பேன் என்று என்னைவிட ஊடக நண்பர்களுக்கு தெளிவாக தெரியும்" என சிரித்துக் கொண்டே நடிகை கௌதமி பதிலளித்தார்.

You'r reading சர்கார் போஸ்டருக்கு நடிகை கௌதமி எதிர்ப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மருத்துவப் படிப்புக்கான 2 ஆம் கட்ட கலந்தாய்வு எப்போது?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்