சண்டக்கோழி 2 படக்குழுவுக்கு தங்க மழை!

சண்டக்கோழி படக்குழுவினருக்கு தங்கம்

சண்டக்கோழி படக்குழுவினருக்கு சில வாரங்களுக்கு முன் படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ் தங்கம் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, தற்போது படக்குழுவினர் 150 பேருக்கு நாயகன் விஷால் மற்றும் இயக்குனர் லிங்குசாமி ஆகியோர் தனித்தனியே தங்கநாணயத்தை பரிசாக வழங்கினர்.

அத்துடன், அனைவருக்கும் விருந்தளித்தனர். நாயகன் மற்றும் இயக்குனர் ஆகியோர் தனித்தனியாக தங்க நாணயம் வழங்கியது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியளித்துள்ளது.

அக்டோபர் 18 ஆம் தேதி, தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது ‘சண்டக்கோழி 2’ திரைப்படம்.

யுவன் ஷங்கர் ராஜா இசையில், விஷால் பிலிம் பேக்டரியின் தயாரிப்பில் இந்தப் படம் உருவாகியுள்ள என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading சண்டக்கோழி 2 படக்குழுவுக்கு தங்க மழை! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - குழந்தை கடத்தலை தடுக்க அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்ன? - நீதிமன்றம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்