இசை சக்கரவர்த்தி இளையராஜாவுக்கு எதிராக வழக்கு...

இசை சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி இளையராஜாவுக்கு எதிராக பெங்களூரு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, ரமண மகரிஷி மட்டுமே இழந்து மீண்டும் உயிர்த்தெழுந்ததாகவும், இயேசு கிறிஸ்து மீண்டும் உயிர்த்தெழுந்ததற்கான ஆதாரங்கள் எங்கும் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு கிறிஸ்துவ சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இது மட்டுமல்லாமல் பல இடங்களில் இளையராஜாவுக்கு எதிராக காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை இளையராஜா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டி உள்ள இந்திய கிறிஸ்தவ மகாசபை, இளையராஜா மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி பெங்களூரு மாவட்ட கூடுதல் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய கிருத்துவ மகா சபையின் தலைவர் அசோக் கூறுகையில், இளையராஜா கூறியுள்ள கருத்து உலக மக்கள் தொகையில் 65% உள்ள கிருத்துவ மதத்தை புண்படுத்துவது போன்றதாகும். அவர் கூறியுள்ள கருத்து கிறித்தவர்களின் புனித நூலான பைபிளை அவமதிப்பது போன்றது என்று தெரிவித்துள்ளார்.

You'r reading இசை சக்கரவர்த்தி இளையராஜாவுக்கு எதிராக வழக்கு... Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - விஸ்வாசம் படத்தில் தூக்குத் தண்டனை கைதியா அஜித் ?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்