தமிழ் ராக்கர்ஸிடம் கெஞ்சும் நிலைமைக்கு ஆளான இயக்குநர்

தமிழ் ராக்கர்ஸ் பாஸ் கொஞ்சம் பார்த்து பண்ணுங்க என்று பலூன் திரைப்பட இயக்குநர் சினீஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் ராக்கர்ஸ் பாஸ் கொஞ்சம் பார்த்து பண்ணுங்க என்று பலூன் திரைப்பட இயக்குநர் சினீஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் நடிப்பில் சினிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பலூன். இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். டிசம்பர் 29 அன்று இத்திரைப்படம் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தை இணையத்தளத்தில் வெளியிடவேண்டாம் என்று சட்டவிரோதமாகத் திரைப்படங்களைப் பதிவேற்றம் செய்யும் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்தின் நிர்வாகத்திடம் இப்படத்தின் இயக்குநர் சினிஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுபற்றி தனது ட்விட்டரில் கூறியுள்ள சினீஷ், ”பலூன் படத்தை சட்டவிரோதமாக 2650 இணையத்தளங்களில் பதிவேற்றுவதை சென்னை உயர் நீதிமன்றம் தடை செய்துள்ளது. எப்படியும் தமிழ் ராக்கர்ஸைத் தடை செய்யமுடியாது. தமிழ் ராக்கர்ஸ் பாஸ் கொஞ்சம் பார்த்து பண்ணுங்க. ஒரு வாரம் டைம் கொடுத்தால் என் தயாரிப்பாளர் தப்பித்துவிடுவார்” என்று தெரிவித்துள்ளார்.

You'r reading தமிழ் ராக்கர்ஸிடம் கெஞ்சும் நிலைமைக்கு ஆளான இயக்குநர் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஆவடி அருகே மின்சார ரயில் தடம் புரண்டது

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்