நான் நல்லவரா கெட்டவரா? கவிஞர் வைரமுத்து

Am I good or bad? vairamuthu

கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாடகி சின்மயி குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள வைரமுத்து, தற்போது வீடியோ மூலம் சின்மயிக்கு பதிலளித்துள்ளார்.

இது குறித்து வீடியோ மூலம் வைரமுத்து கூறியதாவது:
'என் மீது சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் எல்லாம் முழுக்க முழுக்க பொய்யானவை. முற்றிலும் உள்நோக்கம் உடையவை. அவை உண்மையானவையாக இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் என் மீது வழக்கு தொடரலாம். சந்திக்க காத்திருக்கிறேன். மூத்த வழக்கறிஞர்களோடும் அறிவுலகத்தின் ஆண்டோர்களோடும் கடந்த ஒரு வாரமாக கலந்தாலோசித்து வந்தேன். அசைக்க முடியாத ஆதாரங்களை தொகுத்து திரட்டி வைத்துள்ளேன். எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். நீங்கள் வழக்கு போடலாம். சந்திக்க காத்திருக்கிறேன். நான் நல்லவரா கெட்டவரா என்பதை இப்போது முடிவு செய்யவேண்டாம். நீதிமன்றம் சொல்லட்டும். நீதிக்கு தலை வணங்குகிறேன்'.

இந்நிலையில் வைரமுத்துவின் கருத்துக்கு தமிழக பா.ஜ.க. தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தொிவித்துள்ளாா். அவா் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில் "சந்தி சிரித்தபின் சந்திக்கிறேன் என்கிறார் கவிஞர். நிந்திக்க அவகாசம் கொடுத்து ஒரு வாரம் கழித்து சிந்திக்க வேண்டிய அவசியம் என்ன?சந்தக்கவிஞர்மீது சந்தேகமே அதிகரிக்கிறது" என்று தமிழிசையும் கவிதை வடிவில் பதிவிட்டுள்ளார்.

மத்திய இணை அமைச்சராக பதவியேற்பதற்கு முன்பு பத்திரிகை ஆசிரியராக பணிபுரிந்த சமயத்தில் அக்பர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 11 பெண் பத்திரிகையாளர்கள் குற்றம்சாட்டினர் இது தொடர்பாக தமிழிசை கருத்து தெரிவிக்காதது குறிப்பிடதக்கது.

You'r reading நான் நல்லவரா கெட்டவரா? கவிஞர் வைரமுத்து Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - விநாயகரின் பக்தரானார் தோனி! ஹனுமந்த் சர்மா

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்