இளம் ரசிகர்கள் வாழ்வை பலியிடும் விஜய்! தொடரும் சர்கார் பிரச்சனை.

Sarkar Cigarette issue youngster affect

சர்கார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான போது புகைபிடிக்கும் காட்சியில் தொடங்கிய சர்ச்சை, கதை திருட்டு, ராஜினாமா, அரசியல் என தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 

படம் வெளியானலும் சர்ச்சைகள் குறையவில்லை, அதிமுக அமைச்சர்கள் படத்திற்கு ஏதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிகளுக்கு ஏதிராக பாமகாவின் பசுமைத் தாயகம் சர்க்கார் படத்தின் இயக்குனர் மற்றும் சன்பிக்ச்சர்ஸ் நிறுவனத்திற்கு ஏதிராக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சினிமாவில் வரும் காட்சிகளைப் பார்த்துதான் 53% புகைப்பிடிக்க கற்றுக் கொள்கின்றனர் என ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. இந்த சூழலில் திரைப்படங்கள் மூலமாக புகையிலை விளம்பரங்களை திணிக்கும் சதியில் சிகரெட் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன, அந்த சதிக்கு நடிகர் விஜய்யும் இயக்குனர் முருகதாஸ்யும் உடந்தையாகியுள்ளார்.

சர்கார் படத்தில் குறைந்தது 22 காட்சிகளில் விஜய் புகைபிடிக்கும் காட்சி வருகிறது. ஒவ்வொரு காட்சியும் சிகரெட்க்கான விளம்பரமாகவே தெரிகிறது.

நடிகர் விஜய் சிகரெட் பாக்கெட்டை திறப்பது,அதை எடுத்து வாயில் வைத்து பற்ற வைப்பது,புகைவிடுவது என அனைதையும் பார்கும் இளயத் தலைமுறையினர் இதுதான் ஹீரோயிசம் என நினைத்துக்கொண்டு பின்பற்ற தொடங்கிவிடுவார்கள்

நடிகர் ரஜினிகாந், கமலஹாசன்,சுர்யா உள்ளிட்ட பலர் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டோம் என அறிவித்துள்ளது போல நடிகர் விஜய்,அஜீத், தனுஷ் உள்ளிட்டவர்களும் அறிவிக்க வேண்டும்.

மேலும், திரையுலகினர் சிறார்களுக்கு எதிமறை செயல்களை செய்ய  ஊக்குவிப்பதை கைவிட வேண்டும். அரசாங்கம் அதனை சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்தவும் வேண்டும்." என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் கட் அவுட் பிரச்சனையில் இளைஞரின் மரணம் கொலையா தற்க்கொலையா என போலீசார் விசாரணை செய்து வரும் சம்பவம் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பலர் ஏதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள், எதிர்ப்புகள்  இருக்கட்டும், நடிகர்களை  தனது ரோல் மாடலாக நினைத்து உங்களைப் பார்த்து இளம்தலைமுறை-யினர் கெட்டப் பழக்கத்திற்கு அடிமையாகிவிடக்கூடாது, என கருத்தில் கொண்டு நடியுங்கள்.

You'r reading இளம் ரசிகர்கள் வாழ்வை பலியிடும் விஜய்! தொடரும் சர்கார் பிரச்சனை. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பொருளாதாரம் குற்றுயிரும் குலையுயிருமாக மாற்றப்பட்ட நாள் இன்று: ராமதாஸ்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்