ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு ஓராண்டாக நீடிக்கும் லீவு

rajini journey to america

ரஜினி ஓய்வு எடுப்பதற்காக குடும்பத்துடன் அமெரிக்கா செல்ல இருக்கிறார்.

கடந்த மாதம் 29ம் தேதி ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான 2.0 திரைப்படம் பல நூறு கோடிகளை வசூலித்து சாதனைப்படைத்தது. மேலும் பொங்கலுக்கு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் பேட்ட ரிலீஸுக்கு தயாராகவுள்ளது. இந்த படத்தை வெளியிடும் வேலைகளும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

இதனை போன்று தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் ரஜினி தற்போது அமெரிக்கா சென்று ஓய்வு எடுக்கவுள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்திருந்தார். பிறகு அவரது மன்றம் அனைத்தையும் கட்சியாக மாற்றும் பணி தீவிரமாக நடைப்பெற்று வந்தது.

ஆனால் அவர் அறிவித்து ஓராண்டு ஆகப்போகிறது இதுவரை அவர் கட்சியை பற்றி எந்த ஒரு அறிவிப்பும் தரவில்லை, மேலும் அவர் அமெரிக்காவில் இருந்து ஜனவரி மாதம் முதல் வார இருதியில் தான் திரும்ப வருவார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

இதனால், இப்போதைக்கு ஆன்மிக அரசியலுக்கு ரஜினி லீவு விட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கிண்டலடித்து வருகின்றன.

You'r reading ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு ஓராண்டாக நீடிக்கும் லீவு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கம்ப்யூட்டர்களை வேவு பார்ப்பதா? ஜனநாயகத்தை சவக்குழியில் தள்ளிய மோடி ‘சர்கார்’... வைகோ சீற்றம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்