குயின் ஆன காஜல் அகர்வால் யூடியூப் டிரெண்டிங்கில் பாரிஸ் பாரிஸ் டீசர்!

kajalagarwal newmovie parisparis

காஜல் அகர்வால் நடித்துள்ள பாரிஸ் பாரிஸ் படத்தின் டீசர் யூடியூப் டிரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

விவேகம் படத்தின் தோல்விக்கு பிறகு காஜல் அகர்வாலுக்கு பெரிய படங்கள் வரவில்லை. மேலும், கீர்த்தி சுரேஷ் வருகையால், விஜய் படங்கள் தொடர்ந்து அவர் கைவசம் சென்று விட்டது. இந்நிலையில், பாலிவுட்டில் கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியாகி அவருக்கு தேசிய விருது வாங்கி கொடுத்த குயின் படத்தின் ரீமேக்கில் காஜல் அகர்வால் நடித்து வந்தார். அந்த படத்தின் டீசர் தற்போது ரிலீசாகி யூடியூப் டிரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

இந்த டீசரில் தமிழ்நாட்டில் இருந்து காஜல் அகர்வால், பாரிஸுக்கு சென்று அங்குள்ள நாகரீகத்தை பின்பற்ற முடியாமல் அவதிப்படுவதை மிகவும் நகைச்சுவையாக படமாக்கியுள்ளனர்.

மேலும், தென்னிந்திய மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளத்திலும் குயின் படம் ரீமேக் ஆகியுள்ளது. அதன் டீசர்களும் அந்தந்த மொழியில் வெளியாகி வைரலாகியுள்ளன.

You'r reading குயின் ஆன காஜல் அகர்வால் யூடியூப் டிரெண்டிங்கில் பாரிஸ் பாரிஸ் டீசர்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தனுஷை வைத்து புது படத்தை இயக்கும் வெற்றிமாறன் – அப்போ வடசென்னை பார்ட் 2 அவ்வளவுதானா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்