ஸ்டார்ட்டிங் ஓகே.. பினிஷிங் மோசம்.. மும்பையை கட்டுப்படுத்திய சென்னை பௌலர்கள்!

163 runs target to chennai super kings

ஐபிஎல் 2020 திருவிழா ரசிகர்களின் ஆர்ப்பாட்டம் இல்லாமல் தொடங்கியது. இன்று முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் இடையே பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. அதன்படி, டாஸில் வென்ற சி.எஸ்.கே பந்து வீச்சை தேர்வு செய்தது. முதல் ஓவரை தீபக் சாகர் வீசினார். தீபக் சாகரின் முதல் பந்தையே ரோஹித் சர்மா பவுண்டரிக்கு அனுப்பி அதிரடி காட்டினார். வழக்கம் போல வேகப்பந்து வீச்சை அடித்து நொறுக்கிய ரோகித் பியூஷ் சாவ்லாவின் முதல் ஓவரிலேயே அவுட் ஆனார். இதற்கடுத்து சாம் குர்ரான் அடுத்த ஒவர் வீச முதல் பந்திலேயே குயிண்டன் டி காக்கும் கேட்ச் ஆனார். ரோகித், குயிண்டான், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் முறையே 12, 33, 17 ரன்களில் அவுட் ஆனார்கள். இதனால் ஸ்டார்ட் சொல்லிக்கொள்ளும்படியாக அமைந்தது.

ஆனால் 15 ஓவர்கள் நெருங்கையில் மும்பை அணி திணறியது. பொல்லார்ட், பாண்டியா என அடுத்தடுத்து அனைவரும் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி, 9 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்திருந்தது. ஜடேஜா, சகார் 2 விக்கெட், சாவ்லா, குர்ரன், தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதற்கிடையே, முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் சென்னை அணி பேட்டிங் ஆட இருக்கிறது.

You'r reading ஸ்டார்ட்டிங் ஓகே.. பினிஷிங் மோசம்.. மும்பையை கட்டுப்படுத்திய சென்னை பௌலர்கள்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஐபிஎல் தொடரில் பந்துவீச்சு ஆதிக்கம்: பாண்டிங் கருத்து!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்