இந்திய அணியின் புதிய கிட் ஸ்பான்ஸர்... அறிமுகம் செய்தது பிசிசிஐ!

mpl joined with bcci for indian team kit sponsor

கடந்த 2016 முதல் 2020 வரை இந்திய அணியின் கிட் ஸ்பான்ஸராக NIKE நிறுவனம் இருந்து வந்தது. இதன் ஐந்து வருட கால ஒப்பந்தம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதனால் புதிய கிட் ஸ்பான்ஸராக தேர்ந்தெடுக்கும் வேலையே பார்க்க தொடங்கியது பிசிசிஐ. அதன்படி, தற்போது இந்திய அணியின் புதிய ஸ்பான்ஸராக MPL உடன் ஒப்பந்தம் செய்துள்ளது பிசிசிஐ என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் நவம்பர் 2020 முதல் டிசம்பர் 2023 வரையிலான ஆட்டங்களில் MPL ஸ்பான்ராக செயல்படும் என தெரிய வந்துள்ளது. இந்திய அணி உள்ளிட்ட 19 அணிகளுக்கான கிரிகெட் கிட்ஸ் மற்றும் ஜெர்ஸியே MPL தயாரித்து கொடுக்கும் என்ற அதிகாரப்பூர்வமான தகவலையும் வெளியிட்டுள்ளது பிசிசிஐ. அதன்படி நடக்கவிருக்கும் இந்தியா - ஆஸ்ரேலியா அணிகளுக்கான ஆட்டத்தில் MPL நிறுவனத்தின் புதிய ஜெர்ஸியை வீரா்கள் அணிந்து விளையாடுவர்கள் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது..

You'r reading இந்திய அணியின் புதிய கிட் ஸ்பான்ஸர்... அறிமுகம் செய்தது பிசிசிஐ! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஹனிமூனுக்கு 40 லட்சமா..! அசந்துபோன ரசிகர்கள்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்