இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சி: தவான் தகவல்

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளது. அங்கு ஒருநாள், இருபது ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் ஆட உள்ளன. ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியினர் அணிய இருக்கும் ஆடையை பற்றிய பதிவினை தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். புதிய ஆடையை அணிந்திருக்கும் புகைப்படத்துடன் "புதிய ஆடை, புதுப்பிக்கப்பட்ட ஊக்கம். செல்வதற்கு தயார்" என்று ஷிகர் தவான் பதிவிட்டுள்ளார். அவர் அணிந்துள்ள ஆடை 1992ம் ஆண்டு உலக கோப்பை போட்டிகளில் இந்திய அணியினர் அணிந்து விளையாடிய ஆடையை ஒத்திருக்கிறது. 1992ம் ஆண்டு கிரிக்கெட் உலக கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடந்தன. அப்போது இந்திய அணியினர், கடல் நீல வண்ண ஆடையை அணிந்திருந்தனர். தோள்பட்டை பகுதியில் வண்ண பட்டைகள் இடம் பெற்றிருந்தது.

தற்போது அதேபோன்ற வண்ணத்தில் முதன்மை ஸ்பான்சரான பைஜூ நிறுவனம் மற்றும் கிட் ஸ்பான்சரான எம்பிஎல் நிறுவனம் ஆகியவற்றின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இரு அணிகளும் 3 ஒருநாள் போட்டிகள், 3 இருபது ஓவர் போட்டிகள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளன. முதல் ஒருநாள் போட்டி, நவம்பர் 27ம் தேதி நடைபெற உள்ளது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகள் அடிலெய்ட் நகரிலும், கடைசி ஒருநாள் போட்டி கான்பெரா நகரில் நடைபெறும். இரண்டு அணிகளுக்கும் கடைசியான நடந்த ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கடைசியாக இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிராக பங்கேற்றதே கடைசி ஒருநாள் போட்டியாகும். தென் ஆப்பிரிக்கா, இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக இந்திய அணி ஆட இருந்த போட்டிகள் கோவிட்-19 பாதிப்பின் காரணமாக கைவிடப்பட்டன. ஏறத்தாழ 9 மாதங்களுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது.

You'r reading இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சி: தவான் தகவல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - உத்திர பிரதேசத்தில் கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக அவசர சட்டம்.. 5 வருடம் வரை சிறை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்