நீண்ட நாள்களுக்கு பின் முழு ஒரு நாள் போட்டி.. தோல்விக்கு என்ன சொல்கிறார் கோலி!

சிட்னியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆரோன் பின்ச் மற்றும் வார்னர் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்திய பந்து வீச்சாளர்கள் இந்த விக்கெட்டை பிரிக்க முடியாமல் திணறினர். நிதானமாக ஆடிய வார்னர் 28 வது ஓவரை வீசிய ஷமி பந்தில் 69 ரன்களில் பெவிலியன் திரும்பினார். ஆனால் மறுபுறமு நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொண்டிருந்த கேப்டன் பின்ச் உடன் ஸ்மித் கைகோர்த்தார்‌. இருவரும் அணியின் ரன்ரேட்டை ராக்கெட் வேகத்தில் உயர்த்தினர்.

கேப்டன் பின்ச் (114) அதிரடியாக விளையாடி தனது சதத்தை பதிவு செய்தார். மறுபுறம் பந்து வீச்சாளர்களை புரட்டி எடுத்துக்கொண்டிருந்த ஸ்மித்தும் (105) தனது சதத்தை பூர்த்தி செய்து அசத்தினார். ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் இழப்புக்கு 374 ரன்களை விளாசி அசத்தியது. 375 ரன்கள் என்ற பெரிய இலக்கை கொண்டு களமிறங்கிய இந்திய அணியை 308/8 ரன்களில் சுருட்டினர் ஆஸ்திரேலிய அணி வீரர்கள். இதற்கிடையே, இந்தப் போட்டி குறித்து விராட் கோலி பேசியுள்ளார். போட்டி முடிந்த பிறகு பேசிய அவர், ``கடந்த சில மாதங்களாக டி20 விளையாடி வருகிறோம். நீண்ட நாள்களுக்கு பின் முழு ஒரு நாள் போட்டியில் இன்று தான் விளையாடி இருக்கிறோம். எனினும் பயிற்சிக்கு எங்களுக்கு ய நேரம் நிறைய கிடைத்தது. அணியில் இருக்கும் பலரும் இதற்கு முன்னும் ஒரு நாள் போட்டிகளில் ஆடி அனுபவம் பெற்றவர்கள்தான் என்றாலும் இன்றைய போட்டியில் 25-26 ஓவர்களுக்குப் பின் அணி வீரர்களின் உடல் மொழி ஏமாற்றமளித்தது.

பகுதி நேர பந்துவீச்சாளர்களை எப்படி பயன்படுத்துவது என்பது தொடர்பாக யோசிக்க வேண்டிய நேரம் இது. ஹர்திக் பாண்டியா இன்னும் அதற்குத் தயாராகவில்லை. இதனால் அதனை புரிந்துகொண்டு அதற்கேற்ப திட்டமிட வேண்டும். பேட்டிங்கில் இன்று அனைவருமே ஓர் தீவிரத்துடன் ஆடினோம். எந்தக் கட்டத்திலும் இலக்கை எட்ட முடியாது என்று நினைக்கவே இல்லை. எனினும் முதல் 3 பேட்ஸ்மேன்கள் 130-140 ரன்களைச் சேர்த்திருந்தால் வெற்றி கிடைத்திருக்கும்." என்று பேசியுள்ளார்.

You'r reading நீண்ட நாள்களுக்கு பின் முழு ஒரு நாள் போட்டி.. தோல்விக்கு என்ன சொல்கிறார் கோலி! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - `அதானிக்கு கடன் கொடுக்காதீர்கள்... இந்தியா - ஆஸி போட்டியை பதற்றப்படுத்திய இருவர்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்