வாய்விட்ட மஞ்ச்ரேக்கர்... கெத்து காட்டிய நடராஜன்!

இந்திய அணிக்காகத் தனது முதல் ஒரு நாள் போட்டியை இன்று விளையாடிய சின்னப்பம்பட்டி இளைஞர் நடராஜன். மூத்த வீரரான ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால், அவருக்குப் பதில் நடராஜன் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலியின் முன்னிலையில் 232வது வீரராகச் சேர்க்கப்பட்டார்.

தமிழகத்திலிருந்து இந்திய அணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்தாவது வீரர் நடராஜன்‌. 2002 ல் தமிழகத்தில் இருந்து முதன் முதலில் பந்து வீச்சாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் லட்சுமிபதி பாலாஜி. இந்த போட்டியில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் கடைசி ஓவரில் 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். மேலும் கடந்த 6 போட்டிகளில் பவர் பிளேயில் இந்திய அணி விக்கெட் வீழ்த்தாத நிலையில் இன்று அதற்கு முடிவுகட்டி நடராஜன், பவர் பிளேயில் விக்கெட் எடுத்தார்.

இதற்கிடையே, போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, நடராஜன் அறிமுகமாவதை வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வழக்கம்போல மட்டம் தட்டிப் பேசினார்.

``ஐபிஎல் போட்டிகளை பார்த்து இன்டர்நேஷனல் மேட்ச்சில் விளையாட வைக்கிறார்கள். அதுவும் நடராஜன் டெப்த் ஓவரில் மட்டும்தான் நன்றாக பந்துவீசியிருக்கிறார். இந்திய அணியில் ஏற்கனவே டெப்த் ஓவரில் பந்துவீச பும்ரா, ஷமி இருக்கும் போது நடராஜனை எதற்காக எடுக்க வேண்டும். பவர் பிளேயில் விக்கெட் எடுக்க வேண்டும். ஆனால் அதற்கு நடராஜன் செட் ஆவார் என்று தோணவில்லை" என்று பேசினார் மஞ்ச்ரேக்கர்.

ஆனால் முதல் போட்டியில் பவர் பிளேயில் தன்னோட முதல் விக்கெட் வீழ்த்தி மஞ்ச்ரேக்கர் கருத்தை பொய்யாக்கி உள்ளார் நடராஜன். முதல் விக்கெட்டாக, லபுசேனை தூக்கி தனது இன்டர்நெஷனல் கேரியரை கெத்தாக துவங்கியுள்ளார் நடராஜன். அவருக்கு வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்து வருகிறது.

You'r reading வாய்விட்ட மஞ்ச்ரேக்கர்... கெத்து காட்டிய நடராஜன்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - திருவண்ணாமலை கோவில் மூலஸ்தான வீடியோ : புகார் செய்ய கோவில் நிர்வாகம் முடிவு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்