துபாய்க்கு ஏற்றுமதியாகும் தோனி விளைவித்த காய்கறிகள்!

ஓய்வுக்குப் பிறகு தோனி என்ன செய்யப்போகிறார் என்பது புரியாத புதிராக இருந்தது. ஆனால் தற்போது தனது சொந்த ஊரான ராஞ்சியில் மிகப்பெரிய பண்ணை வீட்டில் வசித்து வரும் தோனி, அங்கு இயற்கை விவசாயம் செய்து வருகிறார். பண்ணை வீட்டில் உள்ள 40 முதல் 50 ஏக்கர் விவசாய நிலத்தில் இயற்கை முறைப்படி, பப்பாளி மற்றும் வாழை உள்ளிட்டவற்றை சமீபத்தில் பயிரிட்டார் தோனி. இப்போது இந்த பயிர்கள் விளைச்சலை கொடுத்துள்ளன.

தோனி விளைவித்த காய்கறிகளை ஜார்கண்ட் மாநில அரசு துபாய்க்கு ஏற்றுமதி செய்ய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. வேளாண்மைத்துறை மூலம் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன என்றும் அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முற்றிலும் இயற்கை உரங்களை கொண்டு தன்னுடைய பண்ணை வீட்டில் தோனி விவசாயம் செய்திருக்கிறார்

நியூ குளோபல் என்ற நிறுவனம் தயாரித்த உரத்தைத் தான் தனது பண்ணை வீட்டில் பயன்படுத்தினார் தோனி. அது அவருக்கு மிகவும் பிடித்துப்போக, நியூ குளோபல் நிறுவனத்தின் பெருமளவிலான பங்கை தோனி வாங்க முடிவு செய்துள்ளார்.இதற்காக நியூ குளோபல் நிறுவனத்திடம் பேசிவிட்டார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

You'r reading துபாய்க்கு ஏற்றுமதியாகும் தோனி விளைவித்த காய்கறிகள்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - எப்பொழுது எக்சர்ஸைஸ் செய்தால் நன்றாக உறங்கமுடியும்? தெரிந்துகொள்ளுங்கள்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்