மதிப்பு கொடுக்க தயாராக இருப்பவர்கள் மட்டுமே வரலாம்!.. சஞ்சய் மஞ்சரேக்கர்

உலகில் கொரோனா பரவல் குறைவாக இருக்கும் நாடுகளில் ஒன்று ஆஸ்திரேலியா. இங்கு கொரானோ வழிகாட்டுதல் நெறிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படுவது தான் இதற்கு முக்கிய காரணமாகும். எவ்வளவு முக்கிய பிரமுகராக இருந்தாலும் ஆஸ்திரேலியா சென்றால் அங்குள்ள விதிமுறைகளை பின்பற்றித் தான் ஆக வேண்டும். ஆஸ்திரேலியா சென்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் 14 நாள் தனிமையில் இருந்த பின்னரே விளையாட அனுமதிக்கப்பட்டனர்.

இதற்கிடையே, ஆஸ்திரேலியாவில் கொரோனா விதிமுறைகளை மீறி ஓட்டலில் சென்று சாப்பிட்டதாக ரோகித் சர்மா உள்பட 5 இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது புகார் கூறப்பட்ட நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் இந்திய கேப்டன் விராட் கோஹ்லி மற்றும் பாண்ட்யா இருவரும் விதிமுறைகளை மீறி ஓட்டலை விட்டு வெளியே சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான புகைப்படங்களை ஒரு ஆஸ்திரேலிய பத்திரிகை வெளியிட்டுள்ளது.

இது சர்ச்சையாக வெடித்தது. இதுதொடர்பாக முன்னாள் சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ``அணியில் ளையாட தேர்வாகியிருந்தால் பயோ பபூள் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து, அதற்கு மதிப்பு கொடுக்க வேண்டும். இந்த கட்டுப்பாடுகளுக்கு தயாராக இருப்பவர்கள் மட்டுமே விளையாட வரலாம். முடியாது என்றால் தேர்வுக் குழுவின் பரிசீலனைக்குகூட வர வேண்டாம். அப்படியே போய்விடலாம்" எனக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

You'r reading மதிப்பு கொடுக்க தயாராக இருப்பவர்கள் மட்டுமே வரலாம்!.. சஞ்சய் மஞ்சரேக்கர் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கேரளாவில் 6 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்