சப் டைட்டிலுடன் சூரரைப் போற்று பார்த்த ரகானே.. கொண்டாடும் சூர்யா ரசிகர்கள்!

நடிகர் சூர்யா நடத்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற சூரரைப் போற்று திரைப்படம் கண்டு மகிழ்ந்ததாக கிரிக்கெட் வீரர் ரகானே தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது. இருப்பினும், நட்சத்திர வீரர்கள் இல்லாத நிலையில், ஆஸ்திரேலியா அணியை வீழ்த்திய ரகானே தலைமையிலான இந்திய டெஸ்ட் அணியை பல்வேறு தரப்பினர் பாராட்டிய வண்ணம் உள்ளனர்.

இதற்கிடையே, இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ள இங்கிலாந்து அணி, அடுத்த மாதம் இந்திய கிரிக்கெட் அணியுடன் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. மேலும், அதற்கு பின்னர், டி20 மற்றும் ஒருநாள் தொடர்களிலும் விளையாடவுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்க சென்னை வந்துள்ள ரகானே கொரோனா தனிமைப்படுத்துதலில் உள்ளார்.

இந்நிலையில், ரகானேவிடம் அவரிடம் இன்ஸ்டாவில் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதில், சென்னைக்கு உங்களை வரவேற்கிறேன். எதாவது தமிழ் சினிமா அல்லது சீரிஸ் பார்த்தீர்களா? எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ரகானே, நான் சூரரைப் போற்று திரைப்படத்தை சப் டைட்டிலுடன் பார்த்தேன். எனக்கு பிடித்து இருந்தது. சூர்யா சிறப்பாக நடித்துள்ளார் என தெரிவித்துள்ளார். ரகானேவின் இந்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரி தற்போது, நடிகர் சூர்யா ரசிகர்களால், கொண்டாடப்பட்டு வருகிறது.

You'r reading சப் டைட்டிலுடன் சூரரைப் போற்று பார்த்த ரகானே.. கொண்டாடும் சூர்யா ரசிகர்கள்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கிரிக்கெட் வீரர் பொல்லார்ட் விபத்தில் உயிரிழந்ததாக போலி தகவல்: அதிர்ச்சியடைந்த கிரிக்கெட் ரசிகர்கள்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்