இந்திய அணியில் இல்லாதது வருத்தம்தான்.. ஆனாலும்... நடராஜன் பீலிங்!

இந்திய அணியல் பங்கேற்க முடியாதது வருத்தமளிக்கிறது என தமிழக இளம் கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார். 2021-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதை தொடர்ந்து, தமிழக இளம் வேகப்பந்துவீச்சாளர் நடராஜன், ஆஸ்திரேலியாவுடனான போட்டிகளில் பங்கேற்று நாடு திரும்பியுள்ளார். ஒருநாள், டி20, டெஸ்ட் என அனைத்து பார்மெட்டுகளிலும் சிறப்பான பங்களிப்பை அளித்தார். இதனால், நடைபெறவுள்ள இங்கிலாந்து அணிவுடனான போட்டிகளில் இருந்து நடராஜனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன் பழனி முருகன் கோயிலில் மொட்டை அடித்து நேர்த்தி கடன் செலுத்தினார்.

இந்நிலையில், டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கைக்கு பேட்டியளித்த நடராஜன், இந்திய அணியுடன் இல்லாதது வருத்தமாக இருக்கிறது. கடந்த சில மாதங்களாக அணியுடனே இருந்துவிட்டு இப்போது இல்லாதது கடினமாக இருக்கிறது. ஆனால், குடும்பத்துடன் 6 மாதங்கள் இல்லாததால், தற்போது ஓய்வு அவசியமாறிது. அதனை புரிந்துக்கொண்டேன். இருப்பினும், சென்னையில் நடைபெறும் போட்டியில் இந்திய அணியில் இல்லாதது நிச்சயம் வருத்தம் அளிக்கிறது என்று தெரிவித்தார்.

என்னை பொருத்தவரை, கிரி்க்கெட்டின் அனைத்து பார்மெட்டுகளிலும் விளையாடவே விரும்புகிறேன். இது எனக்கு எப்போதும் பிரஷராகவே இருக்காது. அதற்கு ஏற்றார்போல என்னை தயார் செய்துகொள்வேன். கொரோனா பொது முடக்கத்தின்போது கடுமையான பயிற்சியில் ஈடுபட்டேன். அதுதான் என்னை ஐபிஎல், ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக செயல்பட வைத்தது. இதை எப்போதும் செய்வேன் என்று நடராஜன் மகிழ்ச்சியாக தெரிவித்தார்.

You'r reading இந்திய அணியில் இல்லாதது வருத்தம்தான்.. ஆனாலும்... நடராஜன் பீலிங்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - புவியை சுற்றி பார்க்க சொந்த விமானம் வாங்கிய அமெரிக்க தொழிலதிபர்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்