இந்தியாவுக்கு அடுத்த அதிர்ச்சி சுப்மான் கில் 29 ரன்களில் அவுட்

இந்தியாவுக்கு இன்று தொடக்கத்திலேயே அடுத்தடுத்து அதிர்ச்சி அளிக்கும் சம்பவங்கள் நடந்தன. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ஒருவர் பின் ஒருவராக ஆட்டமிழந்தனர். ரோகித் சர்மா 6 ரன்களிலும், சுப்மான் கில் 29 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சென்னை டெஸ்டில் இங்கிலாந்து மிகச் சிறப்பாக விளையாடி 578 ரன்கள் குவித்தது. இதன் பின்னர் இந்தியா இன்று தங்களுடைய முதல் இன்னிங்சை விளையாட தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், சுப்மான் கில்லும் களமிறங்கினர். இருவரும் கவனமாக ஆடி வந்த போதிலும் தொடக்கத்திலேயே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

6 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த ரோகித் சர்மா, ஜோப்ரா ஆர்ச்சரின் பந்தில் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதன் பிறகு கில்லுடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். ஆஸ்திரேலியாவில் சிறப்பாக ஆடியதைப்போலவே சுப்மான் கில் அதிரடியாக ஆடி வந்தார். ஆனால் அவரும் ஜோப்ரா ஆர்ச்சரின் பந்தில் ஜேம்ஸ் ஆண்டர்சனிடம் கேட்ச் கொடுத்து 29 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து இந்தியா 44 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்தது. தற்போது கேப்டன் விராட் கோஹ்லி புஜாராவுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இந்தியா உணவு இடைவேளையின் போது 2 விக்கெட் இழப்புக்கு 59 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 20 ரன்களுடனும், கேப்டன் கோஹ்லி 4 ரன்களுடனும் ஆடிக் கொண்டிருக்கின்றனர்.

You'r reading இந்தியாவுக்கு அடுத்த அதிர்ச்சி சுப்மான் கில் 29 ரன்களில் அவுட் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 20,614 பந்துகள் கடைசியில் ஒரு நோ பால் சாதனையை இழந்த அஷ்வின்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்