அரசு அலுவலகத்தில் மது குடித்து ஜாலியாக இருந்த அதிகாரிகள் சஸ்பெண்ட்

goverment officials suspended who drunk alcohol at state office

உத்தர பிரதேசத்தில் அரசு அலுவலகத்தில் மது குடித்து ஜாலியாக இருந்த 3 அதிகாரிகளை அம்மாநில அரசு அதிரடியாக சஸ்பெண்ட் செய்தது.

உத்தர பிரதேசம் மாநிலம் அலிகாரில் அம்மாநில அரசு போக்குவரத்து துறை அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகத்தில் பணிபுரியும் 4 அரசு ஊழியர்கள் அங்கு வைத்து மது குடித்துள்ளனர். மேலும், காது கூசும் அளவுக்கு தகாத வார்த்தைகளை பேசி உள்ளனர். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியானது.

அந்த வீடியோவில் 4 அதிகாரிகள் மது அருந்தி விட்டு தகாத வார்த்தைகள் பேசுவது பதிவாகி இருந்தது. இந்த வீடியோ அரசின் கவனத்துக்கு சென்றது. இதனையடுத்து அந்த 4 அதிகாரிகளில் ஒருவரை வேலையை விட்டு நீக்கியது. மற்ற 3 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்தது. உத்தர பிரதேச மாநிலத்தில் அரசு அதிகாரிகள் சரியாக வேலை பார்க்க மாட்டார்கள் என்ற குற்றஞ்சாட்டு உண்டு. இந்நிலையில் அரசு அலுவலத்தில் வைத்து பணியாளர்கள் மது அருந்தி இருப்பது நிர்வாகம் சரியில்லை என்பதை வெளிப்படையாக காட்டுகிறது.

தேர்தல் பணிக்காக வந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்

You'r reading அரசு அலுவலகத்தில் மது குடித்து ஜாலியாக இருந்த அதிகாரிகள் சஸ்பெண்ட் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கொழும்பு விமான நிலையத்தில் நவீன பைப் வெடிகுண்டு; இலங்கையில் தொடரும் பதற்றம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்