தேர்ச்சி பெற்றது தெரியாமல் தோல்வி பயத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவி

girl student suicide for failure fear

மதுராந்தகத்தில் மாணவி தேர்வில் பெயிலாகி விடுமோ என்ற அச்சத்தில், பாஸான உண்மை தெரியாமல் தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாகவே தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் நடந்துள்ளது.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. ஒட்டு மொத்த அளவில் 95.2 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில், தான் தேர்வில் பெயிலாகி விடுமோ என்ற அச்சத்தில் பாஸான மாணவி தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாகவே தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் நடந்துள்ளது.

மதுராந்தகம் அருகே தண்டரைப்பேட்டை கிராமத்தை சேர்ந்த மாணவி சந்தியா. இவர் தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில், தேர்வு முடிவுகள் வருவதற்கு முன்பாகவே காலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அவர் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றது தேர்வு முடிவுகள் வெளியான பிறகு தெரியவந்தது. அந்த மாணவி 500க்கு 191 மார்க் எடுத்து இருந்தார்.

தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்ததால் மாணவிக்கு தோல்வி பயம் ஏற்பட்டதாகவும், அதனால் தற்கொலை முடிவை எடுத்து விட்டதாக சந்தியாவின் பெற்றோர் சோகத்துடன் தெரிவித்தனர்.

பிரபல பைனான்ஸ் நிறுவனத்தில் 814 சவரன் தங்க நகைகள், ரூ.1 லட்சம் ரொக்கம் கொள்ளையடிப்பு

You'r reading தேர்ச்சி பெற்றது தெரியாமல் தோல்வி பயத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - திரிணாமுல் எம்எல்ஏக்கள் 40 பேர் எங்களுடன் தொடர்பில் உள்ளனர் - மம்தாவுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்