காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கும் பேச்சுலர்களை குறிவைத்து கொள்ளை..! நூதன திருடன்கள் கைது..!

Thieves are targetting bachelors

சென்னையில் காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கும் பேச்சுலர்களை மட்டும் குறிவைத்து செல்போன், இருசக்கர வாகனங்களை திருடும் கும்பல் போலீஸிடம் அகப்பட்டு கொண்டது. வடபழனி மசூதி தெருவில் வசித்து வரும் ஜெயக்கிருஷ்ணன் சினிமா உதவி இயக்குனராக உள்ளார். அவர் கடந்த மார்ச் மாதம் வெளியின் புளுக்கம் அதிகம் இருந்ததால் காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்கினார்.

அப்போது அவரது இருசக்கர வாகனத்தையும், செல்போனையும் மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதையடுத்து ஜெயக்கிருஷ்ணன் வடபழனி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதேபோல் வடபழனி சிவன் கோயில்தெருவில் முகமது தல்கா என்பவரும் காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கியபோது அவரது  3 செல்போன்கள் திருடுபோயின. அவரும் வடபழனி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார். சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸ் ஆராய தொடங்கியது.

மேலும் செல்போன் சிக்னலை வைத்தும் விசாரணை நடத்தியதில், சிதம்பரத்தை சேர்ந்த ஜனார்த்தனன் மற்றும் விருதாச்சலத்தைச் சேர்ந்த சிங்காரவேலன் ஆகியோர் காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கும் வீடுகளில் கொள்ளையடிப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீஸ், 16 விலை உயர்ந்த செல்போன்கள் மட்டும் இரு சக்கர வாகம் ஒன்று பறிமுதல் செய்தது. மேலும் அவர்கள் இருவரு நீதிமந்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

You'r reading காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கும் பேச்சுலர்களை குறிவைத்து கொள்ளை..! நூதன திருடன்கள் கைது..! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நயன்தாரா நடித்த திரைப்படத்துக்கு உயர்நீதிமன்றம் தடை..! காரணம் என்ன..?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்