ஹோட்டலுக்கு உரிமம் வழங்க லஞ்சம்: சுற்றுலா துறை அதிகாரி சிக்கினார்

ஹோட்டல்களுக்கு ஆதரவாக அறிக்கை அளிப்பதற்கு லஞ்சம் வாங்கியதாக சுற்றுலா துறை அதிகாரி மீது சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. மதுரையிலிருந்து பழனிக்கு செல்லும் வழியில் அவரிடமிருந்து 7 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்திய சுற்றுலா துறையில் உதவி இயக்குநராக இருப்பவர் ராமகிருஷ்ணன். இவர் ஹோட்டல்களை ஆய்வு செய்து உரிமம் வழங்குவதற்கும் ஸ்டார் அந்தஸ்து வழங்குவதற்கும் லஞ்சம் பெறுவதாக தகவல் கிடைத்துள்ளது.

மண்டல இயக்குநர் ஒருவருடன் சேர்ந்து ராமகிருஷ்ணன் பணவசூலில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலையடுத்து பாட்னா, சென்னை, கொச்சி, எர்ணாகுளம் மற்றும் கொல்லாம் ஆகிய இடங்களிலும் சிபிஐ சோதனை மேற்கொண்டுள்ளது. அதில் ரூ.31 லட்சம் மற்றும் ஆவணங்கள் சிக்கியுள்ளன. ராமகிருஷ்ணன் மீதான குற்றச்சாட்டை விசாரித்த சிபிஐ, மதுரையிலிருந்து பழனிக்கு செல்லும் வழியில் அவரை மடக்கி சோதனையிட்டுள்ளனர். அப்போது அவரிடமிருந்து 7 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. சிபிஐயின் மதுரை பிரிவு சுற்றுலா அதிகாரி ராமகிருஷ்ணன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.

You'r reading ஹோட்டலுக்கு உரிமம் வழங்க லஞ்சம்: சுற்றுலா துறை அதிகாரி சிக்கினார் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - உண்மைக்கு முன்னால் அகம்பாவம் தோற்கும்... மோடியை சாடிய ராகுல் காந்தி!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்