பாஜ எம்பி டெல்லியில் மரணம்: தற்கொலையா?

இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் ஸ்வரூப் சர்மா டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கில் தொங்கினார். அவரது உடல் உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியிலிருந்து 2014 மற்றும் 2019 ஆகிய இருமுறையும் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராம் ஸ்வரூப் சர்மா (வயது 62). இவருக்கு மனைவியும் மூன்று மகன்களும் உள்ளனர். கடந்த சில மாதங்களாக இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். இன்று (புதன்) காலை அவரது அறைக்கதவை வெகுநேரம் தட்டியும் திறக்காததால் உதவியாளர் காலை 7:45 மணியளவில் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் கதவை உடைத்துச் சென்ற பார்த்தபோது ராம் ஸ்வரூப் சர்மா தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டனர்.

கதவு உள்ளே பூட்டப்பட்டிருந்த நிலையில் தற்கொலை குறிப்பு எதுவும் கண்டெடுக்கப்படவில்லை என்ற கூறப்படுகிறது. சர்மாவின் மறைவுக்கு அஞ்சலி தெரிவித்த பிறகு மக்களவை பிற்பகல் 1 மணி வரைக்கும் ஒத்தி வைக்கப்பட்டது.

You'r reading பாஜ எம்பி டெல்லியில் மரணம்: தற்கொலையா? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அந்த மாதிரி பெருசுங்க மெசேஜ் அனுப்ப தடை: இன்ஸ்டாகிராம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்