இரண்டு மரங்களை வெட்டியவருக்கு ரூ.1.21 கோடி அபாரதமாம்!

மத்திய பிரதேச மாநிலம் ரைசன் மாவட்டத்தில் உள்ள பமோரி வன எல்லைக்குட்பட்ட சில்வானி கிராமத்தைச் சேர்ந்தவர் 30 வயதான சோட்டே லால் பிலாலா. இவர் இந்த ஆண்டு ஆரம்பத்தில் வனத்தில் இருந்த இரண்டு சாக்வான் மரங்களை வெட்டியதாக கூறப்படுகிறது. மேலும், தான் வெட்டிய சாக்வான் மரங்களை, நாற்காலிகள் தயாரித்து விற்பனை செய்பவர்களுக்கு கொடுத்தாததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மீது வழக்கு பதிந்த வனத்துறை சில தினங்கள் முன் அவரை கைது செய்தது.

அதன்பின் வனத்துறை அதிகாரி, மஹிந்தர் சிங் என்பவர், சோட்டே லாலுக்கு மரங்களை வெட்டியதாக ரூ.1.21 கோடி அபராதம் விதித்து அதிரடி காட்டினார். இரண்டு மரங்களின் வாழ்நாளில் பெறப்படும் நன்மைகளை விஞ்ஞான ரீதியாக கணக்கிட்டு அதன் அடிப்படையில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

``ஒரு மரத்தின் சராசரி ஆயுள் சுமார் 50 ஆண்டுகள். இது விஞ்ஞான ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த ஆயுட்காலத்தில் ஒரு மரத்திலிருந்து பெறப்பட்ட நன்மைகளின் மதிப்பும் சுமார் ரூ .60 லட்சம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதுபோன்று மொத்தம் அவருக்கு 1.21 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

You'r reading இரண்டு மரங்களை வெட்டியவருக்கு ரூ.1.21 கோடி அபாரதமாம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தமிழகத்தில் ஸ்டாலின், கேரளாவில் பினராயி.. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்