உத்தரபிரதேசத்தில் இளம்பெண்ணை தாக்கும் போலீஸ்

உத்தரபிரதேச மாநிலத்தில் இஸ்லாமிய இளைஞருடன் பழகிய இளம்பெண்ணை போலீஸ் தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் மருத்துவம் படிக்கும் மாணவி ஒருவர் இஸ்லாமிய இளைஞருடன் பழகியுள்ளார். அவர்களை பிடித்த விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் போலீசில் ஒப்படைத்தனர். இளம்பெண்ணை வாகனத்தில் அழைத்து சென்ற போது, பெண் போலீஸ் ஒருவர் அந்த பெண்ணை ஆபாச வார்த்தைகளால் திட்டி அடிக்கிறார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அத்துமீறி செயல்பட்ட பெண் போலீஸை பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக விசாரிக்க மாவட்ட கண்காணிப்பாளருக்கு, காவல்துறை தலைமை உத்தரவிட்டுள்ளது.

You'r reading உத்தரபிரதேசத்தில் இளம்பெண்ணை தாக்கும் போலீஸ் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - விஸ்வாசம் படத்தின் மாஸ் ஓப்பனிங் லிரிக்ஸ் என்ன தெரியுமா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்