திருடனை பிடித்த வீரமங்கை: வேலூரில் பரபரப்பு

Favorite Threading: Throwing in Vellore

சென்னை செல்லும் பேருந்தில் கைப்பையை களவாட முயன்ற திருடனை பெண் ஒருவர் போராடி பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ள நிகழ்வு வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூரை சேர்ந்தவர் ரஞ்சனி (வயது 29). திங்கள்கிழமை இவர் சென்னை செல்வதற்காக வேலூரில் பேருந்து ஒன்றில் ஏறினார். அவர் இருக்கையில் உட்கார முயன்றபோது, தமது பையை யாரோ இழுப்பதை உணர்ந்தார்.
 
உடனடியாக திரும்பிப் பார்த்தபோது, பையை ஒரு மனிதன் திருடிச் செல்ல முயற்சிப்பதை கண்டுகொண்டார். விரைந்து செயல்பட்ட ரஞ்சனி, அந்த மனிதனை தைரியமாக பிடித்துக் கொண்டு, "திருடன், திருடன்" என்று குரலெழுப்பினார். அவரது சத்தத்தை கேட்டு, பேருந்தினுள் இருந்த மற்ற பயணிகளும், அருகிலிருந்த பொது மக்களும் விரைந்து வந்து திருடனை பிடித்துக்கொண்டனர்.
 
பொதுமக்களிடம் தர்ம அடி வாங்கிக் கொண்டிருந்த திருடனை வேலூர் வடக்கு காவல் நிலையத்தை சேர்ந்த காவலர்கள் வந்து கைது செய்தனர். விசாரணையில் அந்த மனிதர் பெயர் சரவணன் என்றும், சேலத்தை சேர்ந்த அவருக்கு வயது 39 என்பதும் தெரிய வந்தது. பல்வேறு நகரங்களுக்கும் ஊர்களுக்கும் சென்று திருடுவது தமது வழக்கம் என்று சரவணன், போலீஸ் விசாரணையின்போது ஒப்புக்கொண்டுள்ளார்.

You'r reading திருடனை பிடித்த வீரமங்கை: வேலூரில் பரபரப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பாண்டேவுக்கு 25,000 ரூபாய் அபராதம்: உச்சநீதிமன்றம் விதித்தது

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்