பவானிசாகர் அணையில் இருந்து 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு

பவானிசாகர் அணையில் இருந்து அதிகப்படியான தண்ணீர் திறப்பு

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து இன்று மாலை 6 மணியளவில் 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

பவானிசாகர் அணையின் உயரம் 120 அடி, இந்த அணை நீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களின் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்ட மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது.

இதனால், அணையில் இருந்து 70 ஆயிர்ம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், கரையோர மக்கள் பீதியடைந்துள்ளனர்.

You'r reading பவானிசாகர் அணையில் இருந்து 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 5 மலை மாவட்டங்களில் கனமழை... வானிலை ஆய்வுமையம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்