பால் நிறுவன அதிபரிடம் nbspரூ. 1 கோடி மோசடி nbspசெய்த கும்பலுக்கு போலீஸ் வலை

தனியார் பால் நிறுவன அதிபரிடம் ஒரு கோடி ரூபாய் ஏமாற்றி திருடி சென்ற கும்பலை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
ஈரோட்டை சேர்ந்தவர் பிரபல  தொழிலதிபர்  மோகன சுந்தரம் தனியார் பால் நிறுவனம் நடத்தி வருகிறார்.  தன்னுடைய தொழிலை விரிவாக்கம் செய்ய பலரிடம் அணுகி கடன் உதவி பெற முயற்ச்சி செய்து வந்துள்ளனர். 
 
இந்த நிலையில் புரோக்கர் ஒருவர் மூலம் அறிமுகமான காந்திலால், ராம்குமார் என்கிற இருவர் சென்னையில் பல வங்கி மேலாளர்களை தங்களுக்கு தெரியும் எனவும் குறைந்த  வட்டியில் வங்கியில் இருந்து  கடன் பெற்று தருகிறோம் என ஆசை வார்த்தை  கூறியுள்ளனார்.
 
மோகன சுந்தரம் 50 கோடி ரூபாய் தேவை இருப்பதாக கூறியதையடுத்து 50 கோடிக்கு கமிசன் ஒரு கோடி ரூபாயை கொண்டு வர வேண்டும் என இருவரும் கூறியுள்ளனர். மேலும் தாங்கள் சொல்லும் இடத்திற்கு கமிசன் தொகை ஒரு கோடியயை எடுத்துவர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
 
இதனையடுத்து மோகன சுந்தரத்தை ஏமாற்றுவதற்கு முடிவு செய்த இருவரும் மோசடியயை அரேங்கேற்றுவதற்கு பட்டினப்பாக்கத்தில் உள்ள பெரும் பணக்காரர்கள் தங்கும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பை  ஏற்பாடு செய்ய திட்டமிட்டனர்.சில தினங்களுக்கு முன்பு வாடைக்கு எடுப்பது போல் அங்கு சென்று இடத்தை பார்த்து விட்டு பிறகு வந்து தங்குவதாக கூறிவிட்டு புறப்பட்டு சென்றுள்ளனர்.
 
மோகன சுந்தரத்திற்கு போன் செய்து குறிப்பிட்ட அடுக்குமாடி குடியிருப்பிற்கு கமிசன் தொகையுடன் வர சொல்லியுள்ளனர். பின்னர் அங்கு சென்ற மோகன சுந்தரத்திடமிருந்து பணப்பெட்டியயை வாங்கி பணத்தை எண்ணிவிட்டு காரில் பத்திரமாக வைத்துவிட்டு வருவதாக காந்திலால் கூறியுள்ளார். 
 
சிறிது நேரத்தில் அறையில் குடிக்க நீர் இல்லை கீழே போய்  சொல்லிவிட்டு வருகிறேன் என ராம்குமாரும் சென்றுள்ளார், ஏற்கனவே காரில்  தயாராக இருந்த காந்திலாலுடன் ராம்குமார் தப்பிப்செல்ல வேகமாக காரில் ஏறினார்.
 
இவர்கள் பரபரப்புடன் வெளியேறுவதை பார்த்த அடுக்குமாடி குடியிருப்பில் பணியாற்றும் ஊழியர் அறை வாடைக்கு எடுக்கவில்லையா? என கேட்டதற்கு அவசரமாக உறவினர் ஒருவரை அழைத்து வர செல்வதாகவும் திருச்சி ராஜேஷ் என்ற பெயரில் அறையயை புக் செய்து வைக்குமாறு சொல்லிவிட்டு வேகமாக காரில் புறப்பட்டு சென்றுள்ளனர்.
 
சிறிது நேரத்திற்கு பிறகு வெளியே சென்ற இருவரும் திரும்பி வராததையடுத்து சந்தேகம் அடைந்த மோகன சுந்தரம் கீழே சென்று விசாரித்த போது  தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
 
 புகாரின்பேரில் மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் சி.சி டி.வி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். குற்றவாளிகள் பயன்படுத்திய கார் பதிவு எண் போலி என தெரியவந்துள்ளது.
 
குற்றவாளிகள் பெங்களூரில் இருப்பதாக வந்த தகவலையடுத்து தனிப்படை போலீசார் பெங்களூரு சென்றுள்ளனர்.

You'r reading பால் நிறுவன அதிபரிடம் nbspரூ. 1 கோடி மோசடி nbspசெய்த கும்பலுக்கு போலீஸ் வலை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - திமிங்கலங்களை கரைக்கு இழுத்துவந்து கொல்லும் வினோத திருவிழா !

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்