நீட் தேர்வு ஹால் டிக்கெட்டில் குளறுபடியா? என்ன செய்ய வேண்டும்...?

neet exam hall ticket issue students do this

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளால் மாணவர்கள் குழப்பம் ஆழ்ந்துள்ளனர்.

ப்ளஸ் 2 முடித்த மாணவர்கள், அடுத்து  மருத்துவப் படிப்பில் சேருவதற்கான ‘நீட்’ மருத்துவ நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் வரும் மே 5ம் தேதி நடக்கிறது. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட மொத்தம் 11 மொழிகளில் நீட் தேர்வானது நடைபெறுகிறது. சுமார் 15 லட்சத்து 19 ஆயிரம் மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளனர். தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர். 

இந்நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வுக்கான கொடுக்கப்பட்ட ஹால் டிக்கெட்டுகளில் தேர்வு நடைபெறும் இடம் வேறாகவும், தேர்வு நடைபெறும் மையம் வேறாகவும் இருப்பதாகப் பல மாணவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். இதனிடையே, மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்ற மாணவி நீட் தேர்வு ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்த போது, தேர்வு எழுதும் மையம் மதுரை எனவும், தேர்வு எழுவதும் இடம் திருநெல்வேலியில் உள்ள அரசுப் பள்ளி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவி மற்றும் அவரின் பெற்றோர் இந்த குளறுபடிகளை யாரிடம் தெரிவிப்பது எனக் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்நிலையில், ஹால் டிக்கெட் குளறுபடி குறித்து விளக்கம் அளித்துள்ள மதுரை மாவட்ட கல்வி அலுவலர், ‘நீட் ஹால் டிக்கெட்டில் ஏதேனும் குழப்பம் இருந்தாலோ, விவரங்கள் சரியாக இல்லாமல் இருந்தாலோ அத்தகைய ஹால் டிக்கெட்டுகளை பெற்று முதன்மை கல்வி அலுவலகத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்’ என்று அறிவுறுத்தியுள்ளார்.

ஐபிஎல் ஆடினது போதும்.. உடனடியாக நாடு திரும்புங்க.. வெளிநாட்டு வீரர்களுக்கு வந்த அதிரடி உத்தரவு!

You'r reading நீட் தேர்வு ஹால் டிக்கெட்டில் குளறுபடியா? என்ன செய்ய வேண்டும்...? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வில்லனாக குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளார்’..! –சித்தார்த் மறைமுக கிண்டல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்