அடுத்த 2 நாட்களுக்கு அனல்காற்று வீசும் 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

next 2 days sun heat will rise

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு அனல்காற்று வீசும்.

தமிழகத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து, சூரியன் கடுமையாக சுட்டெரிக்கிறது. இதனால், பொது மக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். இந்நிலையில், இன்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு  12 மாவட்டங்களில் அனல்காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரு தினங்களுக்கு வறண்ட வானிலை காணப்படும் என்றும், காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை ஆகிய 12 மாவட்டங்களிலும் பகல் நேரத்தில் அனல்காற்று வீசும். வெயிளின் தாக்கம் 98.6 டிகிரி வரை பதிவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

ஆகையால், பகல் நேரங்களில் வெளியே செல்லுவதை கூடுமானவரை பொது மக்கள் தவிர்க்க  வேண்டும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

You'r reading அடுத்த 2 நாட்களுக்கு அனல்காற்று வீசும் 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மீண்டும் மோடி பிரதமர் என்ற ராஜஸ்தான் ஆளுநர் பதவி தப்புமா..? நடவடிக்கை எடுக்க ஜனாதிபதிக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்