எடை குறைய இதை குடித்தால் போதுங்க...

Drinks that help to loose weight

சிலருக்கு எடை குறையவேண்டும் என்ற ஆவல் இருக்கும். பாவம்! அதிக 'டயட்' கடைபிடிக்க முடியாமல் திணறுவார்கள். உணவு கட்டுப்பாட்டை தீவிரமாக கடைபிடிக்க இயலாதவர்கள், சரியான பானங்களை அருந்துவதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம் என்று ஊட்டச்சத்து வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

தண்ணீர்:

தண்ணீர் எப்போதும் அருந்தக்கூடிய ஒன்று. எந்த அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்துகிறீர்களோ அந்த அளவுக்கு அதிகமாக உடல் எடை குறையும். இதனுடன் எலுமிச்சை சாறு சிறிது சேர்த்தால் பலன் அதிகம். உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு எலுமிச்சை சாறு குடித்தால், அதிக கொழுப்பு கரைவதற்கு வாய்ப்புண்டு.

காய்கறி சூப்:

காய்கறி வடிசாறான சூப் ஊட்டச்சத்துகள் நிறைந்தது. காய்கறி சூப், உடலின் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும். இரவு சாப்பிடுவதற்கு முன்பு காய்கறி சூப் அருந்தினால் அதிக அளவு கலோரி அடங்கிய உணவை சாப்பிடுவது தடுக்கப்படும்.

காய்கறி ஜூஸ்:

வெஜிடபிள் சூப்பினை போன்று வெஜிடபிள் ஜூஸும் நன்மை தரக்கூடியது. வெஜிடபிள் ஜூஸினை கோடைகாலத்திலும் வெஜிடபிள் சூப்பினை குளிர்காலத்திலும் அருந்தலாம். ஆனால், இவற்றில் சோடியம் குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும்.

கிரீன் டீ:

உடலில் குளூக்கோஸின் அளவை ஒழுங்குபடுத்தி, உடல்எடையை குறைப்பதற்கு கிரீன் டீ பயன்படுகிறது. தினமும் இரண்டு குவளை (கப்) கிரீன் டீ அருந்தினால் பலன் அதிகம். கிரீன் டீ உடலை பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாப்பதோடு, நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அதிகரிக்கும்.

கடுங்காஃபி:

பிளாக் காஃபி எனப்படும் கறுப்பு அல்லது கடுங்காஃபியும் உடலின் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும். கறுப்பு காஃபி கொழுப்பை வெகுவேகமாக குறைத்து ஆற்றல் அளவை அதிகப்படுத்துகிறது. கறுப்பு காஃபியில் காஃபைன் அதிக அளவில் இருப்பதால் ஓய்வாக இருந்தாலும்கூட கலோரி செலவாகும். வெறும் வயிற்றில் கறுப்பு காஃபி அருந்த வேண்டாம். நாளுக்கு இருமுறைக்கு மேலும் அருந்துவதை தவிர்க்கவும்.

ஆடை நீக்கப்பட்ட பால்:

ஸ்கிம்ட் மில்க் என்னும் ஆடை நீக்கப்பட்ட பாலில் கொழுப்பு சத்து குறைவான புரதம் உள்ளது. இதிலுள்ள வைட்டமின் டி மற்றும் கால்சியம் ஆகியவை எலும்புக்கு உறுதி அளிக்கும். இதை தினமும் அருந்துவதால் கலோரி அதிகரிக்காமல் உடலுக்கும் தேவையான வைட்டமின்கள் மட்டும் கிடைக்கும்.

You'r reading எடை குறைய இதை குடித்தால் போதுங்க... Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சர்க்கரை நோய் இருப்பவர்கள் ஃப்ரெஞ்ச் ஃப்ரை சாப்பிடலாமா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்