கால் வெடிப்பினால் பாதத்தின் அழகு கெடுகிறதா??அப்போ இதனை செய்யுங்கள்

how to cure cracks in leg in tamil

தற்போது உள்ள காலக்கட்டத்தில் பெண்கள், ஆண்கள் என இருவர்களுக்குமே பாதத்தில் வெடிப்பு வருவது இயல்பாக மாறிவிட்டது. நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருள்கள் தான் இதற்கு காரணமாக உள்ளது. கெமிக்கலால் தயாரான சோப்பை பயன்படுத்துதல்,மிகவும் கடினமான செருப்புகளை உபயோகப்படுத்துதல் என பல காரணங்களால் வெடிப்புகள் உண்டாகின்றன.இதனை தடுக்க இயற்கையான வழியில் சில குறிப்புகளை காணலாம்.

பாதங்களை பாதுகாக்கும் முறை:-

ஓரு பாத்திரத்தில் எலுமிச்சை சாறு,கஸ்தூரி மஞ்சள்,வேப்பிலை போன்றவற்றை கலந்து மிக்சியில் நன்றாக அரைத்து கொள்ளவேண்டும்.வேப்பிலையில் அதிக கிருமி நாசினிகள் நிறைந்துள்ளதால் கால்களில் உள்ள அழுக்கை முழுவதுமாக நீக்கிவிடும்.அரைத்த கலவையை பாதத்தில் தினமும் தடவி வந்தால் வெடிப்புகள் குறையும்.அதுமட்டும் இல்லாமல் கால்களில் அழுக்கை சேர விடாமல் சுத்தமாக இருந்தாலே வெடிப்புகள் நம்மை அண்டாது.

சில ரகசியங்கள்:-

தினமும் தூங்குவதற்கு முன்பு மிதமான வெந்நீரில் கால்களை 10 நிமிடம் வைக்கவேண்டும்.அவ்வாறு செய்து வந்தால் வெடிப்புகள் பூரணமாக குணமாகிவிடும்.மிக்சியில் மருதாணி இலை,எலுமிச்சை சாறு, கொஞ்சமாக தண்ணீர் விட்டு அரைத்து கொள்ள வேண்டும்.மருதாணியை காலில் பூசி வந்தால் வெடிப்புகள் ஒழியும்.கற்றாழையில் உள்ள ஜெல்லியை தினமும் இரண்டு முறை பயன்படுத்தி வந்தால் இரு மாதங்களில் வெடிப்புகள் குணமடையும்.

இத்தகைய இயற்கையான முறைகளை பின்பற்றினால் கூடிய விரைவில் வெடிப்புகள் யாவும குணமடையும்.

You'r reading கால் வெடிப்பினால் பாதத்தின் அழகு கெடுகிறதா??அப்போ இதனை செய்யுங்கள் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ரோட்டு கடை கொத்து பரோட்டா செய்வது எப்படி?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்