கோவிட்-19: நாம் போகக்கூடாத மூன்று இடங்கள் எவை தெரியுமா?

Govt-19: Do you know the three places we should not go?

உலகில் கோவிட்-19 கிருமி பரவ ஆரம்பித்து ஏறத்தாழ பத்து மாதங்கள் கடந்துவிட்டன. விஞ்ஞானிகளும் மருத்துவ நிபுணர்களும் இன்னும் இந்தக் கிருமியைக் குறித்து ஆராய்ச்சி செய்து கொண்டுள்ளனர். சமுதாய இடைவெளியை கடைப்பிடிப்பது அவசியம் என்று வலியுறுத்தப்பட்டு வந்தாலும் பரவல் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

உலக நாடுகளில் பொது முடக்கம் தளர்த்தப்படுகிறது. தொழில் மற்றும் வணிக நடவடிக்கைகள் திரும்பவும் ஆரம்பித்துள்ளன. மக்கள் வெளியே நடமாட வேண்டிய கட்டாயம் உள்ளது. வேலைக்குச் செல்தல், தொழிலுக்குச் செல்தல் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளோடு, திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் மக்கள் கலந்து கொள்கின்றனர். பொது நிகழ்வுகளில் கலந்து கொள்வதைக் கண்டிப்பாகத் தவிர்த்துவிடலாம். இவை தவிரவும் மூன்று இடங்களுக்குச் செல்லவேண்டாம் என்றும் சுகாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

உணவகங்கள், குடிமையங்கள் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்கள் ஆகிய மூன்று இடங்களிலும் கோவிட்-19 பரவ வாய்ப்பிருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. உணவகங்களில் கோவிட்-19 கிருமி பாதிப்பு இல்லாதவர்களோடு ஒப்பிடும்போது, பாதிப்பு கொண்டோர் வந்து சாப்பிடுவதற்கு இருமடங்கு வாய்ப்பு உள்ளதாகவும் உத்தேசிக்கப்படுகிறது.

உணவகங்கள் மற்றும் குடிமையங்களுக்குச் சென்றால் காற்றோட்டம் மிகவும் குறைவாக இருக்கும். அவற்றின் பணியாளர்கள் நம்மை நெருங்கி வேலை செய்யவேண்டிய நிலை இருக்கும். குறைந்தது ஆறு அடி இடைவெளி என்று குறிப்பிட்ட சமுதாய இடைவெளிக்கேற்ப அங்கு இருக்கைகள் போடுவதற்கு வசதி இருக்காது. மேலும் உணவு சாப்பிடுவதற்கு அல்லது பானங்களைப் பருகுவதற்கு முகக்கவசத்தை எடுக்கவேண்டிய நிலை ஏற்படும். ஆகவே, இந்த இடங்களில் கொரேனா கிருமி பரவுவதற்கு வாய்ப்பு அதிகம். உடற்பயிற்சிக் கூடங்களில் பெரும்பாலும் மற்றவர்கள் பயன்படுத்திய சாதனங்களைப் பயன்படுத்தும்போது கோவிட்-19 பரவக்கூடும்.

தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியே வந்தாலும் முகக்கவசத்தை ஒருபோதும் கழற்றக்கூடாது. யாரையாவது சந்திக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் நல்ல காற்றோட்டமுள்ள வெளியிடங்களில் சந்திப்பை வைத்துக்கொள்வது நலம். ஒருபோதும் முகக்கவசத்தை கழற்றவேண்டாம். செல்ஃபி எடுப்பதை ஒத்திவைப்பது நலம். செல்ஃபி எடுப்பதற்காகக்கூட முகக்கவசத்தை கழற்றக்கூடாது.மற்றவர்களை நம்மால் கட்டுப்படுத்த இயலாமல் இருக்கலாம். ஆனால், நம்மை கோவிட்-19 கிருமியிலிருந்து காத்துக்கொள்வதற்கு இவற்றை நாம் கடைப்பிடிப்பது அவசியம்.

You'r reading கோவிட்-19: நாம் போகக்கூடாத மூன்று இடங்கள் எவை தெரியுமா? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நேற்று நடந்தது ஐபிஎல் 2020 என யாராவது கோலிக்கு நினைவுப்படுத்துங்களேன் - KXIP vs RCB ரிவ்யூ...!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்