கொரோனா முன்னெச்சரிக்கையை ஒழுங்காக கடைபிடிப்பது ஆண்களா? பெண்களா?

who is following properly corona precautions?men or women

உலகம் முழுவதும் கொரோனா பரவல் குறித்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. பல்வேறு விதங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் கைக்கொள்வதைக் கொண்டே பரவல் மட்டுப்படும்.கோவிட்-19 கிருமி பரவுவதை தடுக்கக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல், சுகாதாரம் பேணுதல் போன்றவற்றை ஒழுங்காக கடைபிடிப்பவர்கள் ஆண்களா, பெண்களா? என்ற ஓர் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. தங்கள் நலன் மேலும், மற்றவர்கள் நலன் மேலும் அதிக அக்கறை கொண்டவர்கள் யார் என்பதை குறித்து நடத்தப்பட்ட இந்த ஆய்வு முடிவுகள் முக்கியமான உண்மைகளை உணர்த்துகின்றன.

நியூ யார்க் பல்கலைக்கழகம் மற்றும் யேல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பிகேவியரல் சயன்ஸ் & பாலிஸி என்ற ஆய்விதழில் ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டுள்ளனர். கணக்கெடுப்பு, பல்வேறு தெருக்களில் சேகரிக்கப்பட்ட தரவுகள், மாகாண அளவில் ஏறக்குறைய 1 கோடியே 50 லட்சம் ஸ்மார்ட்போன்களின் ஜிபிஎஸ் தரவுகளை ஒருங்கிணைத்து இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது.இந்த ஆய்வு முடிவின்படி,
தொற்றுநோய் பரவல் மற்றும் தங்கள் சொந்த உடல்நல குறிப்புகளின்படி பெண்களே அதிக அளவில் அக்கறையும் பொறுப்புணர்வும் கொண்டிருக்கிறார்கள் என்றும், பெண்களில் 57.7 சதவீதத்தினரும், ஆண்களில் 42.3 சதவீதத்தினருமே முகக்கவசம் அணிகின்றனர் என்றும், அத்தியாவசியமில்லாத உணவகம், உடற்பயிற்சிக் கூடங்கள், மலரகங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு பெண்களை விட ஆண்களே அதிகம் செல்லுகின்றனர் என்றும் தெரிய வந்துள்ளது.

ஆண்களை விட பெண்களே உடல் நலத்தில் அதிக அக்கறை செலுத்துகிறார்கள், கோவிட்-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கைக்கொள்ளுகிறார்கள் என்று தெரிய வந்துள்ளதால், விழிப்புணர்வு செய்திகளை ஆண்களுக்கேற்றவண்ணம் இன்னும் மெருகேற்றுவது அவசியம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

You'r reading கொரோனா முன்னெச்சரிக்கையை ஒழுங்காக கடைபிடிப்பது ஆண்களா? பெண்களா? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பிகில் படத்தில் நடித்த பாண்டியாம்மாளின் அசத்தலான போட்டோஷூட் !!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்