உடல் பருமனால் உயிருக்கு ஆபத்து - எச்சரிக்கும் மருத்துவர்கள்!

உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய உடல் பருமனால் 5 கோடி பேர் அவதிப்படுவதாக ஆய்வு என்று தெரிவித்துள்ளது.

உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய உடல் பருமனால் 5 கோடி பேர் அவதிப்படுவதாக ஆய்வு என்று தெரிவித்துள்ளது.

நீரிழிவு மற்றும் உடல் பருமன் பிரச்சனை இந்தியாவில் மட்டுமல்ல உலகளவிலும் மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. குறிப்பாக இளைய சமுதாயத்தினர் மற்றும் பெண்கள் மத்தியில் இது பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது.

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின் படி, இந்தியாவில் 7.5 கோடிப்பேர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மற்றும் ஐந்து கோடிப்பேர் உயிருக்கு ஆபத்தினை உண்டாக்கும் வகையிலான உடல் பருமனைக் கொண்டவர்களாக உள்ளனர்.

மற்றொரு அச்சப்படும் கணக்கு, இந்திய வளரிளம் பருவத்தினரில் 9.5 விழுக்காட்டினர் அதிக எடை கொண்டவர்களாகவும் மற்றும் 5 விழுக்காட்டினர் உடல் பருமன் பாதிப்பைக் கொண்டவர்களாக உள்ளதும் அதில் தெரியவந்துள்ளது.

மேலும், “உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, புற்றுநோய், ஒற்றைத் தலைவலி, கருப்பை பாதிப்புகள், மலட்டுத்தன்மை, முழங்கால் மற்றும் மூட்டுவலி, மனஅழுத்தம், உறக்க மூச்சிறைப்பு, இரைப்பை அமிலநோய், முடக்குவாதம் மற்றும்மூட்டுநோய் போன்ற பல்வேறு பரவும் தன்மையற்ற நோய்கள் உடல்பருமனோடு தொடர்புடையவை என்று மருத்துவர் சுப்ரமணியன் தெரிவித்தார்.

You'r reading உடல் பருமனால் உயிருக்கு ஆபத்து - எச்சரிக்கும் மருத்துவர்கள்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஸ்டெர்லைட், காவிரி போராட்டத்துக்கு ஆதரவாக நடிகர் சங்கம் உண்ணாவிரதம்?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்