அதில் கில்லாடியா நீங்க? நிச்சயமா ஆயுசு கெட்டிதான்! ஆய்வு சொல்லுது

நீண்ட காலம் வாழவேண்டும் என்றால் அதற்குச் சில ஒழுங்குமுறைகள் உள்ளன. உணவு பழக்கத்திற்கும் உடற்பயிற்சிக்கும் அதில் முக்கிய இடம் உண்டு. சரியான உணவுகளை சாப்பிட்டு, ஒழுங்காக உடற்பயிற்சி செய்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அந்தப் பட்டியலில் புதிதாக 'பாலுறவு' (sex) சேர்ந்துள்ளது. தொடர்ந்து பாலுறவில் ஈடுபடுகிறவர்களுக்கு நீண்ட ஆயுள் உண்டு என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன. பாலுறவு வெறுமனே உடல் சுகத்தை மட்டும் அளிப்பதில்லை. அது மனநிலையில் உற்சாகத்தை தருகிறது. நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது. இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. இதய நோய்கள் வரக்கூடிய வாய்ப்பினை குறைத்து ஆயுளை நீட்டிக்கவும் அதனால் முடியும்.

இதய நோயும் பாலுறவும்

இதய நோய்கள் உலகமெங்கும் அதிகரித்து உயிரிழப்புக்கும் காரணமாகிறது. ஆகவே இருதய நோய்கள் குறித்து நியூ இங்கிலாந்து ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. 22 ஆண்டுகள் நடந்த நீண்ட ஆய்வு இது. 65 வயதுக்குக் குறைவான ஆண்கள் மற்றும் பெண்களாக மொத்தம் 1,120 பேர் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அந்த ஆய்வின் முடிவு, ஒழுங்காக உடலுறவில் ஈடுபடுதல் இதய நோய் ஏற்படும் அபாயத்தை குறைப்பதுடன், பிற்காலத்தில் அசௌகரியமான அறிகுறிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது. நல்ல பாலியல் வாழ்க்கை முறை கொண்டவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டாலும் உயிர் பிழைக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

பாலுறவு கொள்ளும் எண்ணிக்கையை பொறுத்தமட்டில் வாரத்தில் ஒருமுறைக்கு மேலாக உடலுறவில் ஈடுபடுவோர் மாரடைப்பின்போது உயிரிழக்கும் அபாயம் 27 சதவீதம் குறைவாகும். அதற்கும் குறைவான எண்ணிக்கையில் உடலுறவில் ஈடுபடுவோர் உயிரிழக்கும் அபாயம் 8 சதவீதம் குறைவாகும். மாரடைப்பு ஏற்பட்ட பிறகு, வாரத்திற்கு ஒருமுறை உறவில் ஈடுபடுவது உடல்நலத்திற்கு உதவும். வாரம் ஒருமுறை உறவு கொள்வோர் உயிர் பிழைக்கும் வாய்ப்பு 37 சதவீதம் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இதயவியலுக்காக அமெரிக்க ஆய்விதழும் உடலுறவு கொள்ளும் வீதம் குறையும்போது இதய நோய் வரும் வாய்ப்பு கூடுவதாக தெரிவித்துள்ளது. உடலுறவு நாட்டமும், ஈடுபடும் உடல் திறனும் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கான அறிகுறி என்றும் அது தெரிவித்துள்ளது.

You'r reading அதில் கில்லாடியா நீங்க? நிச்சயமா ஆயுசு கெட்டிதான்! ஆய்வு சொல்லுது Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - டார்ச்லைட் சின்னம் மறுக்கப்பட்டதற்கு தேர்தல் ஆணையத்துக்கு ஏற்பட்ட குறுக்கீடு தான் காரணம் : கமல் பேட்டி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்