இவற்றை தவிர்த்தால் கிட்னி ஆரோக்கியமாக இருக்கும்

நம்முடைய சிறுநீரகங்கள் இரத்தத்தை சுத்திகரிக்கின்றன; கழிவுகளை அகற்றுகின்றன; தாது உப்புகளை சீராக காத்துக்கொள்ள உதவுகின்றன; உடலில் திரவத்தின் அளவை சமச்சீராக பராமரிக்கின்றன. நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தாமல் இருப்பதினால் பலரது சிறுநீரகங்கள் பாதிக்கப்படுகின்றன. சில உணவு பொருள்களை தவிர்த்தால் சிறுநீரகங்களை ஆரோக்கியமாக பாதுகாத்துக் கொள்ளலாம்.

அடர்நிற குளிர்பானங்கள்
அடர்நிற குளிர்பானங்களில் பாஸ்பரஸ் கலந்திருக்கும். ஆகவே, அடர்நிறை குளிர்பானங்கள், சோடா இவற்றை கண்டிப்பாக தவிர்த்துவிடுவது சிறுநீரகத்திற்கு நல்லது.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்
பதப்படுத்தப்பட்டு, கலன்களில் அடைக்கப்பட்டுள்ள உணவு பொருள்களில் (canned foods) சோடியம் அதிக அளவில் இருக்கும். சிறுநீரகத்தை பாதுகாக்க விரும்பினால் சோடியம் மிகக்குறைந்த அளவே இருக்கும் உணவுகளையே சாப்பிடவேண்டும்.

முழு கோதுமை ரொட்டி
முழு கோதுமை ரொட்டியில் (Whole wheat bread) அதிக அளவு நார்ச்சத்து நிறைந்திருக்கும். இதில் இருக்கும் பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ஆகியவை சிறுநீரகத்திற்கு கேடு விளைவிக்கும். ஆகவே, அதை தவிர்ப்பது நல்லது.

பதப்படுத்தப்பட்ட இறைச்சி
இறைச்சியை பதப்படுத்தும்போது உப்பு சேர்க்கப்பட்டு உலர வைக்கிறார்கள் அல்லது கலன்களில் அடைக்கிறார்கள். இதை சாப்பிட்டால் உடலில் சேரவேண்டிய சோடியத்தின் அளவை கட்டுக்குள் வைக்க இயலாது. ஆகவே, பதப்படுத்தப்படாத இறைச்சியையே சாப்பிடவேண்டும்.

பால் பொருள்கள்
பால் பொருள்களில் வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் அதிகம் காணப்பட்டாலும், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் இரண்டும் மிக அதிக அளவில் இருக்கும். ஆகவே, பால் பொருள்களை நிறைய அளவு சாப்பிட்டால் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு ஏற்றதாக அமையாது.

ஊறுகாய்
ஊறுகாய் செய்வதற்கு உப்பு பயன்படுத்தப்படுகிறது. சிறிதளவு ஊறுகாயில் 300 மில்லி கிராம் சோடியம் காணப்படும். ஆகவே, சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்ற அக்கறை கொண்டவர்கள் ஊறுகாய் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

You'r reading இவற்றை தவிர்த்தால் கிட்னி ஆரோக்கியமாக இருக்கும் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 3 மாதங்களில் பாப்புலர் பிரண்ட் வங்கிக் கணக்குகளில் ₹ 100 கோடி முதலீடு மத்திய அமலாக்கத் துறை அதிர்ச்சி தகவல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்